அமெரிக்காவில் ராஜா காது கழுதைக்காதுக் காலம்..
ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலின் கைத்தொலைபேசியை அமெரிக்காவின் உளவுப்பிரிவான என்.எஸ்.ஏ கண்காணித்துள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.
இந்தச் செய்தி ஒரு பயங்கரவாதிக்கும், ஜேர்மனிய சான்சிலருக்கும் அமெரிக்கா வேறுபாடு காணவில்லை என்ற கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து அஞ்சலா மேர்க்கல் நேரடியாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை தெரிவித்ததுடன் இந்த பாராதூரமான குற்றச் செயலுக்கு பூரண விளக்கம் தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிரான்சிய பத்திரிகையான லீ மொன்டேவிற்கு எட்வேட் சுனோவ்டன் வழங்கிய செவ்வியில் பிரான்சில் 7.3 மில்லியன் தொலைபேசி உரையாடல்கள் அமெரிக்கர்களால் வடித்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சூடேறிய விவகாரம் இப்போது ஜேர்மனிக்குள் நுழைந்துள்ளது.
ஏற்கெனவே பிரேசில் பிரதமர் டில்மா ரவுசெப்பின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா உளவறிந்த செய்தி அம்பலத்திற்கு வந்து சென்ற மாதம் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை அவர் நிறுத்தியிருந்தார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவு பெரும் பாதிப்படைந்தது, அதேபோல மெக்சிக்கோவின் முன்னாள் அதிபரின் உரையாடலையும் வடித்தெடுத்துள்ளார்கள்.
இவை எல்லாவற்றையும் விட அமெரிக்காவிற்கு பெரும் பாதகமாகவும், நெருக்கடியாகவும் மாறியிருப்பதுதான் அஞ்சலா மேர்க்கல் விவகாரமாகும்.
மற்றைய நாட்டு விவகாரங்கள் சந்திக்கு வந்தபோது ஒருவரை ஒருவர் உளவறிவது சர்வசாதாரணம் என்று பூசி மெழுகிய அமெரிக்க அதிபர் இந்த விடயத்திலோ அதுபோன்ற போலி நியாயங்களை கற்பிக்க முடியாத நெருக்குவாரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகைப் பேச்சாளர் வழமைபோல பத்திரிகையாளர் முன் தோன்றினார்.
அஞ்சலா மேர்க்கலின் கைத்தொலைபேசி ஒற்றுக் கேட்கப்பட்ட விவகாரம் பொய்யானது என்றும், தமது உளவுப்பிரிவினர் தகவல் அறிய வேண்டிய இடத்தில் மேர்க்கல் இல்லை என்றும் கூறினார்.
ஆனால் இந்த விவகாரத்தை அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போது அவரது உடல் மொழி, தரையைப் பார்த்த விழிகள் யாவும் அவர் வடிகட்டிய பொய்யைப் பேசுகிறார் என்பதைத் தொட்டத் தெளிவாகக் காட்டின.
மேலும் கடந்த யூன் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜேர்மனி வந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று பேசிச் சென்றிருந்தார்.
அவருடைய பேச்சு வெறும் வாய்ப்பேச்சு என்பதும், உறவு நட்புப்பற்றி, அமெரிக்கா வெளிப்படையாகப் பேசினாலும்கூட, அவர்களுடைய இதயத்தின் அடித்தளத்தில் ஜேர்மனியை பழைய எதிரியாகவே காண்கிறது என்பதும் இதனால் வெளிப்படையாக தெரிந்துள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனியும், பிரான்சும் இணைந்து அடைந்துவரும் பலம், அத்தோடு அவர்கள் ரஸ்யாவின் பக்கமாக சரிந்து செல்லும் போக்கு யாவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தலைவலியாகவே இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் அமெரிக்காவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்து, தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்து, இனி பிரிட்டனும் முழு மனதுடன் ஐரோப்பிய ஒன்றிய நீரோட்டத்தில் கலக்கப்போகிறது என்று தெரிவித்திருந்தார்.
இவருடைய இந்த எத்தனம் ஜேர்மனியின் முதன்மையை சரிப்பதற்கான முயற்சி என்று ஜேர்மனி சந்தேகப்பட்டது.
மேலும் சில தினங்களில் ஐரோப்பிய ஒன்றியம் – அமெரிக்கா தடையற்ற வர்த்தகம் என்ற மேற்கண்ட பிரேரணை ஐரோப்பிய ஒன்றியத்தில் வாக்கெடுப்பிற்கு வரவுள்ளது, இது வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
காரணம், இந்த விவகாரம் நடைபெற்றுக் கொண்டிருக்க ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு எதிரான பதிலடி நடவடிக்கையில் இறங்கியது.
இதுவரை காலமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் வங்கிகளிலும் இருந்து எங்கு எப்படி பணம் பரிமாற்றமாகிறது என்பதைக் கண்டறிவதற்கான ரீ.எப்.ரி.பி என்ற உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் செய்திருந்தது.
இதன் மூலமாக பயங்கரவாதிகள் எங்கு பணத்தை அனுப்புகிறார்கள் என்பதை இலகுவாகக் கண்டறிய வாய்ப்பிருந்தது, ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று இடை நிறுத்தம் செய்துள்ளது.
காரணம் ஐரோப்பிய ஒன்றிய வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய பயன்படுத் சிப்ற் கோட் இலக்கங்கள் அனைத்தையும் கைப்பற்றி, அதன் மூலமாக பணம் பரிமாற்றம் செய்யப்படும் சகல விபரங்களையும் ஐரோப்பிய ஒன்றிய அனுமதி இல்லாமலே அமெரிக்கா திருடிவிட்டது.
ஆகவே அமெரிக்கா மீதான நம்பிக்கையீனத்தையும், வெறுப்பையும் காட்ட இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதை எளிதாக உணர முடிகிறது.
ஏற்கெனவே சீனா அமெரிக்காவை உளவறிவதாக அமெரிக்கா ஆரம்பித்த பரப்புரை இப்போது அமெரிக்காவின் தலையில் இடியாக இறங்கியுள்ளது.
சீனா அல்ல: உண்மையில் தனது இரகசியங்கள் அம்பலமாகப் போவதை உணர்ந்துதான் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நாடகத்தை முன்னெடுத்ததா..? என்ற சந்தேகத்தையும் இப்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.
இந்த நிகழ்வுகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் சரிய ஆரம்பித்துவிட்டது என்பதன் அடையாளமாகவே தெரிகிறது.
இரண்டாவது உலக மகாயுத்த கால நெருக்குவாரத்திற்குள் இப்போது அமெரிக்காவின் உளவறிதல் விவகாரம் வந்து சிக்குப்பட்டுள்ளது பயறு உடைக்கும் திரிகைக்குள் கருங்கல் மாட்டுப்பட்டதைப் போன்ற கடகடப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது திரிகையே உடைந்து துண்டாக்கப்படுமளவுக்கு வெப்ப அதிகரிப்பை ஏற்படுத்தப்போகிறது..
தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் ஒட்டுக்கேட்கும் ராஜா ஒருவர் வருவார்.. அவர் ஒட்டுக்கேட்பதால் அவருடைய காது கழுதைக் காதாக மாறும்..
அந்தப் படத்தில் ராஜா காது கழுதைக்காது என்ற வாசகம் தொடர்ந்து வரும்..
இப்போது ஒபாமாவின் காதைப் பார்க்க அமெரிக்காவில் இது ஒற்றுக்கேட்கும் ராஜாவின் காலம் என்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது..
அலைகள்

0 Responses to அஞ்சலா மேர்க்கலின் கைத்தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டது...