Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நேரடியாக தலையிடுமாறு கோரி பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

தமிழக மீனவர்கள் விஷயத்தில் கண்டு கொள்ளாமல் இருக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்கும் இந்திய அரசு, அண்மையில் குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அந்நாட்டு தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்ததாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா, இலங்கை கடற்படையினரால் தாங்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்த்து தமிழக மீனவர்கள், தாங்கள் தனது சொந்த நாட்டு அரசாங்கத்தினாலேயே கைவிடப்பட்டுவிட்டோம் என்ற உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

மேலும், 65 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக மீனவர்கள் மீதான நடவடிக்கையை நிறுத்துமாறு இலங்கையிடம் கண்டிப்புடன் கூற வேண்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தலையிட கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com