Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழியினில் அடாத்தாக கூடியேறியுள்ள சிங்கள குடியேற்றவாசிகளிற்கு அரச காணிகளை பகிர்ந்தளிக்கும் படையினரது முயற்சி இன்று தடைப்பட்டு போயுள்ளது. வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான இக்காணிகளினில் அடாத்தாக குடியேறியுள்ள சிங்கள குடியேற்றவாசிகள் தற்போது நிரந்தரவீடுகளையும் கட்டிவருகின்றனர்.இந்நிலையினில் அவர்களிற்கு அடாத்தாகப்பிடித்துள்ள காணிகளை சொந்தமாக்கி விட அரசு முற்பட்டுள்ளது.

இலங்கை அரசவுயர் மட்ட பணிப்பினையடுத்து  வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் இராணுவ சிவில் நிர்வாக அலுவலக படை அதிகாரிகள் சகிதம் இன்று காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையினில் ஈடுபட்டிருந்தனர்.குறித்த குடியேற்றவாசிகள் மின்னிணைப்பு போன்றவற்றை பெற்றுக்கொள்ளவும் அரச வீடமைப்பு சலுகைகளை பெற்றுக்கொள்ளவும் நிரந்தர காணியுரிமைகளை பெறவேண்டியுள்ளது.

இதனிடையே குறித்த சிங்கள குடியேற்ற பிரதேசத்தினில் சுமார் 300 வரையான தமிழ் குடும்பங்களும் குடியேறியுள்ளன.யுத்த அவலங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இக்குடும்பங்கள் காணிகளோ வீடுகளோ அற்ற் தமக்கும் வீடமைப்பு திட்டங்கள் மற்றும் காணிகளை தர கோரிவருகின்றன.இந்நிலையினில் இன்று சிங்கள குடும்பங்களிற்கு காணி பகிரப்படுவதற்கு அவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. தகவலறிந்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை படையினர் விரட்டியடித்தனர்.சம்பவ இடத்திற்கு அதை தொடர்ந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர்கள் சென்றதையடுத்து படையினர் வாகனங்களினில் தப்பித்து வெளியேறிவிட்டனர். வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர்.அதனால் காணிகளை பகிரும் நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

0 Responses to நாவற்குழி சிங்கள குடியேற்றவாசிகளிற்கு காணி ஒதுக்கீடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com