23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வு கொழும்பின் மத்தியில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.15 மணியளவில் சம்பிரதாய நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.
பிரித்தானிய முடியாட்சியின் கீழ் பல்வேறு காலகட்டங்களில் இருந்த 53 நாடுகள் பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கின்றன. அந்த நாடுகளுக்கிடையில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பொருளாதார, அரசியல், இராஜதந்திர, சமூகவியல் உறவுகளைப் பேணும் முகமாக பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அதன், 23வது மாநாட்டை இலங்கை இம்முறை நடத்துகிறது.
பொதுநலவாய மாநாட்டின் பிரதான அமர்வில் கலந்து கொள்ள வருகை தந்த நாடுகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களுக்கு செம்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் கலாசார அடையாளங்களைப் பிரதிபலிக்கும் முறையில் அழைத்து வரப்பட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா- அவரது பாரியார் ஆகியோரினால் வரவேற்கப்பட்டனர்.
இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டு, வாழ்த்துக்கூறும் கலாசார நடனத்தோடு ஆரம்பித்த பொதுநலவாயத்தின் அரச தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்புரை நிகழ்த்தினார். பிரித்தானிய மகா ராணியின் பொதுநலவாயத்துக்கான விசேட செய்தியை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் வாசித்தார். பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா செயற்பாடுகளை ஒழுங்கமைத்து உரையாற்றினார்.
பொதுநலவாயத்தின் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கான தலைமைப் பதவியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அவுஸ்திரேலியப் பிரதமர் டொனி அயோட் கையளித்தார். இதனையடுத்து பொதுநலவாய மாநாட்டினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இனி தொடர்ந்து தலைமையேற்று நடத்துவார்.
23வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் தொனிப்பொருளான “சமத்துவத்துடனான வளர்ச்சி, பரிபூரணமான அபிவிருத்தி“ என்பதை முன்னிறுத்தியே மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று காலை ஆரம்பித்த பிரதான அமர்வின் ஆரம்ப நிகழ்வினைத் தொடர்ந்து காலை 11.55 மணியளவில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸூடன் உத்தியோகபூர்வமாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 11.45 தொடக்கம் பிற்பகல் 2.15 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் நிறைவேற்று அமர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகமாக கமலேஷ் சர்மாவினால் அரச தலைவர்களை வரவேற்கும் நிகழ்வும், பிற்பகல் 2.30 மணியளவில் இளைஞர் பிரதிநிதிகளுடனான அரச தலைவர்களின் சந்திப்பும் இடம்பெறவுள்ளது.
இதனிடையே, பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கு பிரித்தானிய அரச குடும்பம் வழங்கும் சம்பிரதாயபூர்வமான இராப்போசனத்தினை கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் இளவரசர் சார்ள்ஸ் வழங்குகிறார். அத்தோடு இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுக்கு வருகின்றன.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கு இடையில் இன்று நவம்பர் 15ஆம் திகதி காலை 10.15க்கு ஆரம்பித்துள்ள பிரதான அமர்வுகள் எதிர்வரும் 17ஆம் திகதி மதியம் 01.00 மணி வரையில் நடைபெறவுள்ளது. நாளை சனிக்கிழமை 16ஆம் திகதி ஆரம்பிக்கும் நிகழ்வுகளில் பொதுநலவாய நாடுகளின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. அத்தோடு, அரச தலைவர்களுக்கான மதிய போசன விருந்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை சனிக்கிழமை வழங்கவுள்ளார்.
பொதுநலவாயத்தின் அரச தலைவர்களுக்கிடையிலான மாநாட்டின் இறுதி நிகழ்வாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா மற்றும் தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இடம்பெறும். அத்தோடு, 23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு உத்தியோகபூர்வமாக நிறைவுக்கு வரும்.

0 Responses to பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013: பிரதான அமர்வு ஆரம்பம்