Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாளை மறுநாள் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியின் பெங்களூரு வருகையையொட்டி, போலீசாருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது.

நாளை மறுநாள் 2 வது முறையாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பெங்களூரு வருகை தருகிறார். பெங்களூரு அரண்மனை வளாகத்தில் உரையாற்ற உள்ள நரேந்திர மோடியின் வருகையை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கை களுக்காக அந்த அரண்மனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போலீசாரில் பிடியில் கடந்த ஒரு வாரமாகவே இருந்து வருகின்றன.

மோடியின் பாதுகாப்பு கருதி, அரண்மனை வளாகத்திலேயே மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்க ஹெலிகாப்டர் தளம் அமைக்கபட்டு உள்ளது. பாதுகாப்புக்கு 6 ஆயிரம் போலீசார் குவிக்கபட்டு உள்ளனர்.

பெங்களூருவில் போலீசார் மட்டுமே உடைகள் வாங்கும் கடையில் ஒரு மர்ம நபர் போலீஸ் போல வந்து 10 உடைகளை வாங்கி சென்றதாகவும், அதன் பின்னர்தான் அவர் போலீஸ் இல்லை என்று தெரிய வந்தது என்றும் கடைக்காரர் கூற,

இந்த தகவல் மாநில முதல்வர் சித்தாரமையா வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து, அங்கு போலீசாருக்கும் அடையாள அட்டை  வழங்கப்பட்டு அவர்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர்.

0 Responses to மோடியின் பெங்களூரு வருகையையொட்டி போலீசாருக்கும் அடையாள அட்டை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com