கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியில் தமிழர்களாகிய நாங்கள் தனித்துவமானவர்கள். எங்களை நாங்களே ஆளும் உரிமையைக் கோருவதில் தவறு ஏதும் கிடையாது.
அதுவும், எங்களுடைய உரிமை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்வதில் எமக்கு உடன்பாடு கிடையாது. எங்களை நாங்களே ஆளும் கோரிக்கைகள் என்றைக்குமே நியாயமானதாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கு ஆயுத வழிமுறைகளில் பயணிக்க முடியாது. அதில் உடன்பாடு இல்லை. ஆனால், எமது சுயாட்சிக்கான உரிமையை யாராலும் நிராகரிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பூர் பாதுகாப்பு வலயத்துக்காக பொதுமக்களின் காணிகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டமையைக் கண்டித்தும், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும் நேற்று சனிக்கிழமை திருகோணலை கிளிவெட்டியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
திருகோமலையின் சம்பூர் நூற்றாண்டுகள் பழமையான தமிழ்ப் பிரதேசம் ஆகும். அங்குள்ள மக்களை வெளியேற்றிவிட்டு அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் பேசி வந்திருக்கிறது. அப்போது அரசாங்கம் அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ள 500 ஏக்கரைத் தவிர மீதமுள்ள பகுதியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று கூறியிருந்தது. ஆனாலும், அதனை இன்னமும் நிறைவேற்றவில்லை என்றார்.
அத்தோடு, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இப்போது சர்வதேச ரீதியில் அதிக முக்கியத்துடன் நோக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையிலும் அதன் துணை அமைப்புக்களினாலும் அக்கறையோடு சேப்படுகின்றது. எனவே அரசாங்கத்தினால் ஏமாற்ற முடியாது என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

0 Responses to எங்களை நாங்களே ஆளுகின்ற உரிமையைக் கோருவதில் தவறில்லை : இரா.சம்பந்தன்