இந்தியாவின் அதி உயர் விருதான பாரத ரத்னா நேற்று முன் தினம் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான டாக்டர் சி.என்.ஆர்.ராவுக்கும் அறிவிக்கப்பட்டன.
இவ்விருது தமக்கு மிகப்பெரும் கௌரவம் என இருவருமே கூறியிருந்தனர். ''என் தாயாரைப் போன்று தங்களது புதல்வர்களுக்காக மாபெரும் அர்ப்பணிப்புக்களை செய்த இந்தியாவின் அனைத்து தாய்மார்களுக்கும் இவ்விருதை சமர்ப்பிக்கிறேன்'' என்றார் சச்சின் டெண்டுல்கர்.
''என்னை இந்தியா இணங்கண்டு கொண்டமைக்கு நன்றி. இவ்விருதை எனது சக நண்பர்கள், சிஷ்யர்கள் உட்பட அனைத்து அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்'' என்றார் சி.என்.ஆர்.ராவ்
ஆனால், அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கடுமையாக தொணியில் சில அறிவுரைகளையும் சி.என்.ராவ் வழங்கினார். இதன் போது ஒரு கட்டத்தில் அவர் அரசியல்வாதிகளை ''முட்டாள்கள்'' என உபயோகித்த சொற்பதம் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
''இந்தியாவில் அறிவியல் துறைக்கு அரசியல்வாதிகள் ஒதுக்கும் தொகை மிகக் குறைவானது. அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் காட்டிலும் நாங்கள் அதிகமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் அவர்கள் ஒதுக்குவதை ஒரு நிதியாகவே எடுத்துக் கொள்ள முடியாது. ஏன் இந்த முட்டாள் அரசியல்வாதிகள் இவ்வாறு மிகசொற்பமான நிதியை ஒதுக்குகிறார்கள் எனக் காட்டமாக கேள்வி எழுப்பினார்'' சி.வி.ராமன்.
மேலும் 'நமது முதலீடு குறைவாகவே இருக்கிறது. அதுவும் தாமதமாகவே செலவிடப்படுகிறது. அந்த நிதியை வைத்துத் தான் செயற்பட்டு வருகிறோம். நம்மை நாம் குறை கூறவேண்டும். நாம் சீனர்களை போல் கடினமாக உழைப்பதில்லை. நாம் இலகுவாகவே இருக்க விரும்புகிறோம்'' எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் நேற்று மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, ''சி.என்.ஆர்.ராவுடன் பாரத ரத்னா விருதை பகிர்ந்து கொள்வதில் மிகப்பெருமை அடைகிறேன். அவர் இந்தியாவுக்காக மேற்கொண்ட சேவை அளப்பரியது. அவருக்கு நான் வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும்.
இனியும் சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாட எனது உடல் ஒத்துழைக்காது என்பதை உணர்ந்தேன். இதுவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தக்க தருணம் என்று முடிவு எடுத்த பின்னரே அதை உத்தியோகபூர்வமாக அறிவித்தேன். இதற்காக நான் வருந்தவில்லை. கிரிக்கெட்டில் தொடர்ந்து தொடர்பிலேயே இருப்பேன்.
கடைசியாக நான் விளையாடிய நாளை சிறப்பான நாளாக கருதுகிறேன். அப்போது நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தேன். கடைசியாக நான் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கண்டு எனது தாயார் மிகவும் சந்தோஷமடைந்தார். கிரிக்கெட் எனது வாழ்க்கை. அது எனக்கு ஆட்சிசன். இந்த 40 வருடங்களில் ஒரு 30 வருடங்கள் நான் கிரிக்கெட்டுடன் வாழ்ந்திருக்கிறேன்' என்றார்.
இனி சச்சின்..? எனக் கேள்வி எழுப்பிய போது, ''நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 24 மணி நேரங்கள் தான் ஆகியிருக்கிறது. குறைந்தது 24 நாட்களாவது எனக்கு ஓய்வு பெறுவதற்கு முதலில் தாருங்கள். அதன் பின்னர் நான் என்ன செய்யவேண்டும் என்பதை பார்த்துக் கொள்கிறேன்'' என்றார்.
உங்கள் வாழ்நாளில் மிக மறக்கமுடியாத இரு தருணங்கள் எவை எனக் கேள்வி எழுப்பிய போது, ''2011 உலக கோப்பையை இந்தியா வென்ற தருணமும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறுதி டெஸ்ட் போட்டியிலிருந்து விடைபெற்ற அனுபவமும்'' என்றார்.
''மேலும், நான் உடல் ரீதியில் இந்தியாவுக்காக விளையாடவிடினும், மனதளவில் இந்தியாவுக்காக எப்போதும் விளையாடுவேன். எப்போதும் பிரார்த்திப்பேன். அது இந்திய அணியில் ஒரு வீரராகத் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை'' என்றார்.
மிகவும் ஏமாற்றமளித்த தருணம் எதுவென கேள்வி எழுப்பிய போது, 2003 உலக கோப்பையில் இறுதிச் சுற்றுவரை நுழைந்து தோல்வியை தழுவிய தருணம் என்றார்.
எதிர்கால இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் பற்றி கேள்வி எழுப்பிய போது, அது பற்றி நகைச்சுவையாக விபரித்தார். ''நான் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது புவனேஷ்வர் குமார் போன்றவர்கள் பிறக்கக் கூடவில்லை. ஆகையால் நான் டிரெஸிங் ரூமுக்கு வரும் போது 'Good Morning Sir' என என்னை அழைக்கவேண்டும் என சிலவேளை கேலியாக கண்டித்து சொல்லியிருக்கிறேன் என்றார்.
மேலும் இளம் தலைமுறையினருடன் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்திருக்கிறேன். யார் திறமையாக விளையாடுகிறார்கள் என்பது முக்கியமில்லை. இது ஒரு குழு விளையாட்டு. ஓரிருவர் மிகச்சிறப்பாக விளையாடினால் ஏனையோரின் பங்களிப்பும் நிச்சயம் அதில் இருக்கும் என்றார்.
தனது மகன் அர்ஜுன் பற்றி கேள்வி எழுப்பிய போது, ''அவனுக்கு கிரிக்கெட்டில் அதிக விருப்பம் உண்டு. ஆனால் நான் ஒரு போதும் எந்தவொரு அழுத்தமும் கொடுத்ததில்லை. நீங்களும் அழுத்தம் கொடுக்காதீர்கள். அவனுடைய சுதந்திரம் அவனுக்கு இருக்கட்டும். எனது தந்தை ஒரு பேராசிரியர். ஆனால் நான் ஏன் பேனாவைப் பிடிக்கவில்லை என நீங்கள் யாரும் என்னிடம் கேட்டதில்லை. அது போல் எனது மகனின் எதிர்காலம் குறித்து அவனே முடிவு செய்து கொள்ள அனுமதியுங்கள்'' என்றார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் மற்றும் கிரிக்கெட்டில் 100 சர்வதேச சதங்களை கடந்த ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் எனும் பெருமைகள் கொண்ட சச்சின் டெண்டுல்கர் கடந்த நவ.15ம் திகதி மேற்கு இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத ரத்னா விருது :
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கும் மிக உயரிய விருதாக பாரத ரத்னா மதிக்கப்படுகிறது. அதைப் பெறும் முதலாவது விளையாட்டு வீரர் எனும் தகுதியையும், பெருமையையும், மிக இளவயதில் பாரத ரத்னா விருது பெறும் நபர் (40) எனும் பெருமையையும் சச்சினையே சாரும்.
கடைசியாக இவ்விருது 2008 இல் ஹிந்துஸ்தானி பாடகர் பீம்சேன் ஜோஷிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் பிறகு ஐந்து ஆண்டுகளாக யாரும் இந்த விருதுக்காக தெரிவு செய்யப்படவில்லை.
அண்மையில் தான் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கலாம் எனும் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டது. முன்னர் கலை, இலக்கியம், அறிவிய, பொதுச்சேவை ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு மட்டுமே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது. சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே அர்ஜுனா விருது, ராஜீவ் கேல் ரத்னா விருது, பத்ம விபூஷன் விருது என்பவற்றை பெற்றிருக்கிறார்.
சி.என்.ஆர்.ராவ். பற்றி :
சர் வி.ராமன், மற்றும் அப்துல் கலாமுக்கு அடுத்த படியாக அறிவியல் துறையில் பாரத ரத்னா விருது பெறும் அறிவியலாளர் சி.என்.ஆர்.ராவ். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். 1951ம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம், பனாராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் அறிவியல் முது நிலைப் பட்டம், அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ல புர்டூ பல்கலை, மைசூர் பல்கலையில் வேதியல் பிரிவுகளில் முனைவர் பட்டங்களை பெற்றவர்.
கான்பூர் ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வேதியல் துறை சார்ந்த 1,400 ஆய்வுக் கட்டுரைகள், 45 புத்தகங்களை எழுதியுள்ளார். உலகின் தலை சிறந்த வேதியல் விஞ்ஞானிகளில் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார்.
சி.என்.ஆர்.ராவின் மேற்கொண்ட திடநிலை மற்றும் மூலப்பொருள் சார்ந்த 60 க்கு மேற்பட்ட ஆய்வுகளே, தற்போது இந்திய விண்வெளி ஆய்வுத் துறை மேற்கொண்டுள்ள செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் திட்டம், நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்களுக்கான திட்டம் என்பவற்றுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.
சி.என்.ஆர்.ராவ் பிரதமரின் அறிவியல் ஆலோசகராகவும் தற்போது செயற்பட்டு வருகிறார்.
அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு ஏன் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை? : பாஜக
2014 லோக்சபா தேர்தலிப் பாஜக வெற்றி பெற்றால், பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய்க்குக் பாரத ரத்னா விருதை வழங்குவோம் என பாஜக தலைவர்களில் ஒருவரான ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு : 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

0 Responses to பாரத ரத்னா பெறும் சச்சின் டெண்டுல்கர் & சி.என்.ஆர்.ராவ்! : நன்றியும் குமுறலும்!