இலங்கையில் இனவிரிசல்களை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று சர்வதேச ஊடகங்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் இன மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைப் பேணுவதே எமது இலக்கு. நாட்டினுள் முப்பது வருடகாலமாக தொடர்ந்த மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கு இன்னமும் கால அவகாசம் தேவை. ஏனெனில், ஒரு சிலரை திருப்திப்படுத்தும் தீர்வினை என்னால் முன்வைக்க முடியாது. நாட்டு மக்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும். அதுவே, நிலைத்து நிற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள சகல மக்களும் எனது நாட்டின் பிரஜைகளே. அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எனக்குரியது. அதனை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அகியவற்றுக்கு பொதுநலவாயம் மிகவும் மதிப்பளிக்கின்றனது. அதேபோன்று எமது நாட்டின் அரசியலமைப்பையும் சட்டங்களையும் நாம் மதிக்கிறோம். எமது நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளை நாம் முன்னெடுத்துள்ளோம். அதற்காகவே பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையில் இனவிரிசல்களை ஏற்படுத்த வேண்டாம் - மஹிந்த