உலகளாவிய ரீதியில் நாடுகளுக்கிடையில் காணப்படும் சமூக- பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைத்து அபிவிருத்தியை நோக்கி முன்செல்லுதல் வேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட 15 யோசனைகளை 23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ‘கொழும்பு பிரகடனம்’ முன்வைத்துள்ளது.
வறுமை, உணவுத்தட்டுப்பாடு, காலநிலை மாற்றம், சமத்துவமற்ற வர்த்தகம், எதிர்பார்க்கக்கூடிய மற்றும் போதியளவிலான நிதி, முதலீடு, அறிவுத்திறன், தொழில்நுட்ப மாற்றம், உலகளாவிய பொருளாதார வர்த்தகத்திற்கு குரல் எழுப்புவதை அதிகரித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளின் மூலம் வளர்ச்சியையும் சமத்துவத்தையும் அடைய முடியும் என்று பொதுநலவாயத்தின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்து கொழும்பு பிரகடனத்தை இறுதி செய்துள்ளனர்.
மொத்தமாக 98 விடயங்கள் தொடர்பில் பொதுநலவாய மாநாட்டின் போது அரச தலைவர்களுக்கிடையில் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. அதன், ஒட்டுமொத்த விடயங்கள் அடங்கிய யோசனைளையே கொழும்பு பிரகடனமாக முன்வைத்துள்ளனர்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வுகள் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகி, 17ஆம் திகதி பிற்பகலில் முறைப்படி நிறைவுக்கு வந்தது. அதன் இறுதியிலேயே கொழும்பு பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
முழுமையான விபரம்:
1.பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது உலகளாவிய கொள்கையின் மையமாக விளங்குகிறது என்பதை உறுதிப்படுத்தி சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் ஏற்றத்தாழ்வு, இடைவெளி அதிகரித்திருப்பதனால் வறுமையை ஒழிக்கும் கொள்கைக்கு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறதென்றும், இது அங்கத்துவ நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியத்துவம் பெறுகிறதென்றும் தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்களும், உலகளாவிய ரீதியில் தோன்றியிருக்கும் சவால்களும் இம்முயற்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கத்துவ நாடுகளின் சமூகங்களிடையே பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது.
எனவே, பொதுநலவாய அமைப்பு நாடுகளில் சமத்துவமான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கும் பிரதான கொள்கையை 2012ம் ஆண்டு டிசம்பர் மாத சாசனத்துடன் இணைத்துக் கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டது.
2. அபிவிருத்தி செயற்பாடுகளில் குறிப்பாக வளர்முக நாடுகளை உலக பொருளாதார நெருக்கடி நிலை பாதிப்பான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பது குறித்தும் நாம் கவலை கொண்டுள்ளோம். எனவே, உலகளாவிய பொருளாதாரத்தை சமநிலைப்படுத்துவதற்கும் நிலையாக வைத்திருப்பதற்கும் சமநிலையில் உலகளாவிய வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
சர்வதேச வர்த்தக, நாணய மற்றும் நிதி நிறுவனங்களில் சீர்த்திருத்தங்களை செய்து அதன் மூலம் வளர்முக நாடுகளுக்கு நியாயமான பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுப்பது அவசியமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
3. பயன்தரக்கூடிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் சமத்துவமான வளர்ச்சியை அடைவதற்கும் வேலைத்தளங்களில் கூடுதலான வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கும் உதவ முடியுமென்பதை நாம் அங்கீகரித்தோம். தரமான கல்வி, திறன் அபிவிருத்தி, சிறந்த சுகாதார வசதி, வளங்களை பெறுவதற்கு சமத்துவமான வாய்ப்பு ஆகியவை பெருமளவில் வேலைவாய்ப்பை பெறுவதற்கு உதவியாக அமையும்.
எனவே, நாம் பயன்தரக்கூடிய வேலைவாய்ப்பையும் அதனை சமத்துவமாக அனைவரும் பெற்று வளர்ச்சிக்கு உறுதுணை புரிவதற்கு உதவி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதென்று தீர்மானித்துள்ளோம்.
4. அனைவருக்கும் அபிவிருத்தியில் ஈடுபடுவதற்கான உரிமை இருப்பதை உறுதிப்படுத்தும் அதே வேளையில் ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் செய்வதற்கும் அனைவருக்கும் பின்தங்கிய நிலையில் உள்ள குழுக்கள், பெண்கள்,இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட அனைவரையும் உள்ளடக்கக்கூடிய வகையில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
5. அனைவருக்கும் யதார்த்தபூர்வமான சமூக பாதுகாப்பை அளிப்பதன் மூலம் முழுமையான அபிவிருத்தியை ஒரு பிரதான ஆயுதமாக பயன்படுத்தி வறுமை, சமத்துவமின்மை, பின்தங்கிய நிலை மற்றும் சமூகத்தில் இருந்து விலக்கிவைத்தல் போன்ற தடைகளை இல்லாமல் செய்வதென்று தீர்மானித்தல். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை பலதரங்களில் வைத்திருத்தல் மூலம் ஏற்படும் நெருக்கடி நிலையை இல்லாமல் செய்து தேசிய ரீதியில் சமூகப் பாதுகாப்பை சர்வதேச உடன்பாடுகளுக்கு அமைய மேற்கொள்வதென்றும் தீர்மானித்தல்.
6. பொதுநலவாய நாடுகளில் பலதரப்பட்ட இயற்கை வளங்கள் இருக்கின்றன. இவை பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து எமது நன்மைக்காக நிலையாக வைத்திருக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அங்கத்துவ நாட்டுக்கும் தன்னுடைய நிதி, தொழில்நுட்ப மற்றும் அமைவு ரீதியிலான தேசிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இருக்கும் இறைமையை அங்கீகரிக்கிறோம். சர்வதேச மட்டத்தில் ஒரு நாட்டுக்கு தன்னுடைய இயற்கை வளங்களை தனது தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து நிலையாக வளர்ச்சியையும் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான உரிமை இருக்கிறது.
7. 2013ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் புத்தாயிரமாம் அபிவிருத்தி இலக் குகளின் முன்னேற்றம் பற்றிய அறிக் கையின் விபரங்களை தெரிந்து கொண்ட பின்னர் சில புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளை ஏற்கனவே அடைந்திருப்பதனால் 2015ம் ஆண்டளவில் மேலும் கூடுதலான இலக்குகளை அடைய முடியுமென்பதை புரிந்து கொண்டோம்.
ஆயினும் சில இலக்குகள் உலகளாவிய ரீதியிலும் பொதுநலவாய அமைப்பிலும் அடைய முடியாதிருப்பதை நாம் அவதானித்துள்ளோம். எனவே, நாம் உடனடியாக சகல உடன்பாடுகளையும் அமுலாக்குவதற்கு தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் குறிப்பாக எட்டாவது இலக்கை பொறுத்தமட்டில் இது உலகளாவிய ஒத்துழைப்பு சம்பந்தப்பட்டிருப்பதனால் அதனை அடைவது அவசியமென்று வலியுறுத்துகிறோம்.
எனவே, நாம் மீண்டும் கூட்டாக நெறியான பங்காளிகளாக இணைந்து அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் 2015ம் ஆண்டில் புத்தாயிரமாவது இலக்குகளை வெற்றிகரமாக அடைய வேண்டும் என்பதிலும் இதுவே உலகின் முன்னுரிமை அளிக்கப்படும் விடயம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
8. எனவே, நாம் அனைவரும் கூட்டாக 2015ம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நிர்ணயிப்பதற்கு உயர்மட்ட செயற்குழுக்களை அடையாளம் கண்டு அதனை பொதுநலவாய அமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சிபாரிசு செய்கிறோம்.
இந்த முயற்சிக்கு ஒவ்வொரு அங்கத்துவ நாடும் தனது பங்களிப்பை வழங்குவதன் மூலம் 69ஆவது ஐக்கிய நாடுகள் பொதுசபையில் அரசாங்கங்கள் கலந்துரையாடி முடிவெடுப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
9. 2015இற்கு பின்னர் ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தி பற்றி உயர்மட்ட கற்றறிந்தோர் குழுவின் அறிக்கையை வரவேற்கும் அதே வேளையில் “அனைவருக்கும் வாழ்க்கையின் மகத்துவம்” என்ற தலைப்பிலான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அறிக்கையும் 2015ம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான வலையமைப்பை மேற்கொள்ள வேண்டுமென்றும் யோசனை தெரிவிக்கிறோம்.
10. உலகளாவிய பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் அதேவேளை பொதுநலவாய அமைப்பில் உள்ள பெருமளவு அறிவையும், நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் நாம் இதுவரையில் சரியாக பயன்படுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டி இதுவரையில் பயன்படுத்தாத இந்த வளங்களை நாம் அனைவரும் பயன்படுத்துவதற்கு திடசங்கட்பம் பூண வேண்டுமென்று கருதுகிறோம்.
அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றுக்கும் இதன் மூலம் உதவி செய்து அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு சமத்துவமாக வளங்களை விநியோகிப்பது அவசியமென்று கருதுகிறோம்.
11. வேகமாக மாறிவரும் உலக சுற்றாடலின் மூலம் வளர்ச்சியை சமத்துவமாக நிலையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு முயற்சிகளை உயர்த்த முடியும். தேசிய மட்டத்தில் இதனை அடைவதற்கு பொதுநிர்வாகத்தை மற்றும் அதற்கான அமைப்புகளை ஒழிவுமறைவற்ற முறையில் செயற்படுத்துவதற்கு வாய்ப்பளித்து அவசியமான அமைப்புகளின் செயற்திறனையும் அறிவையும் உயர்த்துவதற்கு உதவக்கூடிய வகையில் இளைஞர்களை பயன்படுத்தி அதன் மூலம் சந்தை வாய்ப்பை நெறியான முறையில் பயன்படுத்தி தனியார் துறையை வலுப்படுத்தி நீண்டகால அடிப்படையில் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
இதில் அரசாங்க தனியார்துறை பங்களிப்பை ஒரு முதலீட்டு ஆயுதமாக பயன்படுத்தி நிலையான அபிவிருத்தியை அடைய முடியும். சர்வதேச மட்டத்தில் நிதி மற்றும் தொழில்நுட்ப மற்றும் அமைப்பு ரீதியிலான அறிவுத்திறன் அவசியமாக இருப்பதனால் இதன் மூலம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் உலக சுற்றாடலை நிலையாக அபிவிருத்தி கொள்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான புதிய சர்வதேச அனுகுமுறை கைப்பிடிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
அனுபவங்கள் மற்றும் கற்றறிந்த பாடங்களை அங்கத்துவ நாடுகளிடையே பரிமாற்றம் செய்து கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விசேட பங்களிப்பு வழங்க முடியுமென்பதையும் நாம் அங்கீகரிக்கிறோம்.
12. “பொதுநலவாய அமைப்பு தொடர்புபடுத்தும்” என்ற பயன்தரக்கூடிய ஆயுதத்தைப் பயன்படுத்தி பங்காளிகளுக்கிடையிலான உறவை கட்டியெழுப்பி அங்கத்துவ நாடுகளை இந்த தொடர்பாடல் சேவையில் இணைந்து பொதுநலவாய நாடுகளின் மக்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவதும் அவசியமென்றும் கருதுகிறோம்.
13. வறுமை, உணவுத்தட்டுப்பாடு, காலநிலை மாற்றம் சமத்துவமற்ற வர்த்தகம், எதிர்பார்க்கக்கூடிய மற்றும் போதியளவிலான நிதி, முதலீடு, அறிவுத்திறன், தொழில்நுட்ப மாற்றம், உலகளாவிய பொருளாதார வர்த்தகத்திற்கு குரல் எழுப்புவதை அதிகரித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளின் மூலம் வளர்ச்சியையும் சமத்துவத்தையும் அடைய முடியும்.
14. நாம் புத்தாயிரமாம் ஆண்டு பிரகடனத்தையும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் புத்தாயிரமாவது ஆண்டு இலக்குகள் பற்றிய விசேட நிகழ்வையும் ஞாபகப்படுத்தி இந்த பிரகடனத்தை ரியோ 20 ஆவணத்துடன் இணைத்து நாணய இணக்கப்பாட்டையும் அபிவிருத்திக்கான நிதி பற்றிய டோஹா பிரகடனத்தையும் ஐக்கிய நாடுகள் மகாநாட்டின் சகல பிரதான உச்சிமாநாடுகளின் பொருளாதார, சமூக, சுற்றாடல் துறை பிரகடனங்களையும் ஒரு வழிகாட்டியாக வைத்து அவற்றின் முக்கியத்துவத்தையும், இலட்சியங்களையும் உள்ளடக்கக்கூடிய வகையில் சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி பற்றிய ரியோ பிரகடனத்தை எங்களின் 7ஆவது கொள்கையாக நினைத்து செயற்பட வேண்டுமென்றும் சிபாரிசு செய்கிறோம்.
15. நாம் தெரிவு செய்த நிலையான சமத்துவமான அபிவிருத்தியை எமது சமூகங்களிடையே வலுப்படுத்தி அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய பாதை மீது அசையாத நம்பிக்கை வைத்துள்ளோம். இதனை அடைய வேண்டுமாயின் பொதுநலவாய செயலகம் பொதுநலவாய நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டங்களை ஒழுங்கு செய்து இந்த இலக்கை அடைவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து பொதுநலவாய அங்கத்துவ நாடுகளை எதிர்நோக்கியிருக்கும் இடர்களை இல்லாமல் செய்து 2015ம் ஆண்டுக்கு அப்பாற்பட்ட அபிவிருத்திக்கான இலக்கை நிர்ணயிப்பது அவசியம்.
இந்த ஆலோசனைகளின் போது பொதுநலவாய நாடுகளிடையே ஏற்படுத்தக்கூடிய பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். 2015ம் ஆண்டில் நடைபெறும் அடுத்த பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் மாநாட்டில் இதன் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்படும்.

0 Responses to கொழும்பு பிரகடனம் : "ஏற்றத்தாழ்வு இடைவெளியைக் குறைத்து அபிவிருத்தியை நோக்கி செல்தல்"