இன்னும் என்னென்ன நடக்குமோ; நடக்கட்டுமே! என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டிருக்கும் கேள்வி - பதிலகள் வடிவிலான அறிக்கை.
கேள்வி :- அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்பான (?) நிர்வாகம் காரணமாக, ஒரு லோடு மணல் விலை40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக் கிறதாமே?
கலைஞர் :- தமிழகத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள குவாரிகளில் இருந்து மணல் அள்ளுவதற்காக வந்த ஒப்பந்ததாரர் களால் முறைகேடுகள் அதிகரித்ததாக புகார்கள் வந்தன.
இதுதொடர்பான வழக்கில், உயர்நீதி மன்றம் எடுத்த நடவடிக்கையின் விளைவாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கலெக்டர் மற்றும் சில அதிகாரிகள் “சஸ்பெண்ட்” செய்யப்பட்டார்கள். அதனை இந்த அரசு ஒரு அவமானமாகக் கருத வில்லை. அந்த மாவட்டத்தின் புதிய கலெக்டர், அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூடுவதற்கு ஆணை பிறப் பித்தார். மற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்களும், தங்களுக்கும் ஆபத்து வந்து விடுமோ என்றெண்ணியோ என்னவோ, அனுமதி காலம்முடிந்த நிலையில் இருந்த அனைத்து மணல் குவாரிகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 90 குவாரிகளில் 70க்கும் மேற்பட்டவை மூடப் பட்டுவிட்டன. மேலும் குவாரிகளில் “யார்டு”கள் நடத்தி வந்த ஒப்பந்ததாரரும் மாற்றப்பட்டு விட்ட தாகசெய்திகள் வருகின்றன.
எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென்று மாவட்டங் களில் மணல்குவாரிகள் மூடப்பட்ட நிலையில் கட்டுமானப் பணிகளுக்கு மணல் கிடைக்காமல், ஆறு யூனிட் கொண்டஒரு லோடு மணல் விலை 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதாகச் செடீநுதிகள் வருகின்றன.
20-11-2013 தேதிய “தினமணி”,“மணல் விலை தொடர்ந்து உயர்வு - சென்னையில் கட்டுமானத்தொழில் கடும் பாதிப்பு” என்ற தலைப்பில், “செவ்வாடீநுக்கிழமை (நவம்பர் 19) நிலவரப்படி ரூ. 40 ஆயிரம் முதல்
ரூ. 42 ஆயிரம் வரை மணல் விற்பனை செடீநுயப்படுகிறது. மணல் விலை உயர்வால் சென்னை, திருவள்ளூர்உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள் இடையிடையே தடைபட்டுள்ளன” என்றெல்லாம்எழுதியிருக்கிறது.
அதுவும் ஒரு பெருமைதானே? “அம்மா” ஆட்சியில் மணல்கூட நாற்பதாயிரம் ரூபாய் என்று சொல்லிக்கொள்ளலாம் அல்லவா?
கேள்வி :- காய்கறிகளின் விலை ஏறிக் கொண்டே போகிறதே?
கலைஞர் :- இதுபற்றி “விண்ணை முட்டும் காய்கறி விலை உயர்வு ஏன்?” என்ற தலைப்பில் “தந்தி”தொலைக்காட்சியில் சிறப்பு செடீநுதி ஒளிபரப்பு செய்வதாக “தினத்தந்தி” நாளிதழிலேயே செய்திவந்துள்ளது. அந்தச் செய்தியில், “தமிழகத்தில், காய்கறி விலை கடுமையாக உயர்ந் துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெரிய வெங்காயம் கிலோ ரூ.70க்கும், சிறிய வெங்காயம்கிலோ ரூ.45க்கும், கேரட் கிலோ ரூ.55க்கும், பீட்ரூட் கிலோ ரூ. 40க்கும், புது இஞ்சி கிலோ ரூ.160க்கும்,பழைய இஞ்சி கிலோ ரூ.220க்கும், தக்காளி கிலோ ரூ.45க்கும், உருளைக் கிழங்கு கிலோ ரூ.25க்கும்விற்பனை செய்யப்படு கிறது. தொடர் மழையின் போது இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவ மழை போதிய அளவு இல்லாததால் காய்கறி விளைச்சல்பாதிக்கப்பட்டுள் ளது” என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. இவற்றின் விலையைக் குறைப்பதற்காக“காணொலிக் காட்சி” மூலம் ஒரு நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும் (?) என்று எதிர்பார்ப்போமாக!
கேள்வி:- முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்ட சம்பவத்தினையொட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நெடுமாறன் உட்பட சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்களே, அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று “டெசோ” சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லையே?
கலைஞர் :- “டெசோ” சார்பில் நாங்கள் அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தால், சிறையில் இருந்து நாங்கள் வெளியே வர மாட்டோம் என்று நெடுமாறன் அறிக்கை விட்டிருப்பார்! அதனால்தான் நாங்கள் அறிக்கை விடவில்லை. ஏனென்றால், முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு நிகழ்ச்சிக்கு கலைஞருக்கு அழைப்பு அனுப்பப் படுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட நேரத்தில், “ஈழத் தமிழர் படுகொலைக்குக்காரணமாக இருந்தவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது” என்று பதிலளித்தவர் பழ.நெடுமாறன். அப்படிப்பட்டவரை விடுவிக்க வேண்டுமென்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினால் ஏற்றுக் கொள்வாரா?நல்லவேளையாக நீதிமன்றமே அவர்களுக்கு இன்று ஜாமீன் வழங்கிவிட்டது.
மேலும் கொஞ்ச காலமாக அ.தி.மு.க. ஆட்சியை நெடுமாறன் பாராட்டிக் கொண்டுதான் வந்தார். ஆனால் திடீரென்று முள்ளி வாய்க்கால் முற்றம் நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் அளித்த பேட்டியில், “நீதிமன்றத்திலும்,மக்கள் மன்றத்தின் முன்னாலும் முறையிட்டு இந்த அரசின் முகமூடியைக் கிழித்து எறிவோம்; ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் போடுவது, அறிக்கைகள் வெளியிடுவது என்பதுபோன்ற நாடகங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்; ஆனால் அவருடையவன் நெஞ்சம் என்ன என்பதை இந்த இடிப்பு, தகர்ப்பு வேலை நமக்குத் தெளிவாகவெளிப்படுத்தியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். “தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்” என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது!
கேள்வி :- “அமைச்சர்கள் இல்லத் திருமண விழாவால் கலகலத்தது சென்னை - காலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி” என்ற தலைப்பில் புகைப்படங் களோடு“தினமலர்” 21-11-2013 அன்று வெளி யிட்ட செய்தியைப் படித்தீர்களா?
கலைஞர் :- 2012ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஈழத் தமிழர்களின் நலன்களை முன்வைத்து “டெசோ”சார்பில்; நேற்றைய தினம் திருமணம் நடைபெற்ற அதே இடத்தில் மாநாடு ஒன்றினை நடத்த முற்பட்டபோது; அதற்கு அ.தி.மு.க. ஆட்சியினர் அனுமதி மறுத்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது. அப்போதுஉயர்நீதிமன்றத்தில் முறையிட்டு “டெசோ” மாநாடு நடத்த அனுமதி கிடைத்தது. ஆனால் தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா நான்கு திருமணங்களை ஒரே இடத்தில் நடத்தச் சொல்லி, அதிலேபங்கேற்றிருக்கிறார். போக்கு வரத்து எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டது என்பது பற்றியும், ஜெயலலிதாவரும் வழியில் திருமண வீட்டார் சார்பில் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்த “ப்ளக்ஸ் போர்டு”களாலும் சாலைகளில் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது பற்றியும் என்னிடம் சிலர் முறையிட்டார்கள்.
“தினமலர்” செய்திப்படி, “அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவ்வழியே வந்த வாகனங்களை போலீசார் மாற்று வழியில் திருப்பி விட்டனர். இதனால் மக்களின் அவதி அதிக மானது.
பீட்டர்ஸ் சாலையிலிருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலை செல்ல, வாகன ஓட்டிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ராயப்பேட்டை மருத்துவ மனை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ளஅலுவலகங்களுக்குச் செல்ல விரும்பியோர் செய்வது அறியாமல் தவித்தனர். ராயப்பேட்டை நெடுஞ்சாலை முழுவதும் முதல்வரை வரவேற்று பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. பல இடங்களில் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த கொம்பு மற்றும் கம்பி, மக்களைப் பதம் பார்த்தன. திருமணத்திற்கு வந்தவர்கள், பாது காப்பிற்கு வந்த போலீசார் தங்கள் வாகனங்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விட்டுச் சென்றனர். இதனால் சிகிச்சைக்கு வந்தோர் வாக னங்களை நிறுத்த வழியின்றி தவித்தனர். மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்களும் உள்ளே செல்வதற்கும் வாகனங்களை நிறுத்தவும் வழியின்றி சிரமப்பட்டனர்” என்றெல்லாம் “தினமலர்” எழுதியிருக்கிறது.
முதலமைச்சர் செல்லும் வழியில் அவரைப் பாராட்டி “ப்ளக்ஸ் போர்டு”கள் வைப்பதைப் பற்றி நமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் தேவையில்லாமல் நம்மிடம் வம்பு வளர்ப்பதைப் போல “கோபாலபுரம் கொழுத்தது” என்றெல்லாம் போர்டு வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, சென்னை மாவட்டக் கழகத்தினர் முதல்வர் வீட்டு வாசலில் “சொத்துக்குவிப்பு வழக்கு“ பற்றியெல்லாம் போர்டு வைக்க முற்பட்டசெய்தி எனக்குக் கிடைத்ததும் அண்ணா கற்றுக் கொடுத்த அந்த அரசியல் நாகரிகத்தின்படி நான் உடனடியாக அதனைத் தடுத்து நிறுத்தினேன். (காஞ்சிபுரத்தில் அண்ணா வீட்டு வாயிலில்வைக்கப்பட்டிருந்த “கண்டன போர்டு”க்கு எதிரில் ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டை வைத்து, உபயம் - அண்ணா துரை என்று எழுதி வைத்தார்.)
கேள்வி:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின், சட்டப்பேரவை உறுப்பினர் பால பாரதி திண்டுக்கல்லில் அண்மையில் திறக்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம் பற்றி ஜூ.வி. இதழில்
தெரிவித்துள்ள கருத்துக்களைப் பற்றி?
கலைஞர் :- திண்டுக்கல்லில் பாதாளச் சாக்கடைப் பணி இன்னும் முழுமையாக முடிந்த பாடில்லை; அதற்குள் அவசர அவசரமாக தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலமாக முதல்வர் ஜெயலலிதாதிறந்து வைத்திருப்பது திண்டுக்கல் நகர மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று எழுதியிருந்தார். அதற்காக அவர் அந்தக் கட்சியின் மாநிலத் தலைமையிடம் என்ன பாடுபடப் போகிறாரோ? ஆனாலும் அவர் துணிச்சலாக, கடந்த 2007ஆம் ஆண்டு 46 கோடியே 25 லட்ச ரூபாய் திட்ட மதிப்பில் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சரான மு.க.ஸ்டாலின், திண்டுக்கல் நகருக்கு பாதாளச் சாக்கடைத் திட்டத்தை அறிவித்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், பாதாளச் சாக்கடைத் திட்டம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக நடந்தும் 60 சதவிகித பணிகள் தான் முடிவடைந்துள்ளது.
இன்னமும்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உள் இணைப்புக் கொடுக்கப்படவில்லை. சில இடங்களில் குழாய்கள் பதிக்கப்படவே இல்லை” என்றெல்லாம் கூறியிருக்கிறார். முடிவடையாத திட்டங்களை அவசரஅவசரமாகத் திறந்து வைப்பதும், முடிந்த திட்டங்களைத் திறக்காமல் போட்டு வைப்பதும்தான் “அம்மா”ஆட்சியின் “நிர்வாகத் திறமை”.
கேள்வி :- பரமக்குடியில் 11-9-2011 அன்று காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை காவல் துறையினரைக்காப்பாற்றுவதைப் போல இருப்பதாகச் சொல்கிறார்களே?
கலைஞர் :- அந்த அறிக்கை பற்றி நான் கருத்துக் கூறுவதை விட, அ.தி.மு.க.வின் பிரதான தோழமைக்கட்சியும், அடுத்த மாநிலங்களவைத் தேர்தலில் தங்களுக்கு ஓரிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் கட்சியுமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே, “பரமக்குடியில் காவல் துறை நிகழ்த்தியதுப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துகிற ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையை நிராகரிக்கவேண்டு மென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மாநிலக் குழு வலியுறுத்து கிறது” என்று 19-11-2013 அன்று நடைபெற்ற மாநிலக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பதைக் குறிப்பிட்டாலேஅந்த அறிக்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். மேலும் மார்க்சிஸ்ட் கட்சியின் தீர்மானத்தில், “சம்பத் கமிஷன் அறிக்கை காவல்துறையின் அராஜகத்தை மூடி மறைக்கிறது. காவல் துறையின் நடவடிக்கையை பாராட்டுவதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே பழி சுமத்துகிறது. உண்மைக்கு மாறாக காவல துறையைப் பாதுகாக்கும் சம்பத் கமிஷன் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல” என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் தமிடிந மாநிலக் குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலச்செயலாளர், கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்றும், கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்த மாடுகளுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டு மென்றும், மின்வெட்டு குறித்தும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, ஏற்காடு சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற பிரச்சாரத்தில் ஈடுபடுவ தென்று முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித் திருக்கிறார்.
கேள்வி :- தேவகோட்டையில் உள்ள பெண் தலைமைக் காவலர் ஒருவர் வீட்டில் 25 லட்சம்ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாக செய்தி வந்திருக்கிறதே?
கலைஞர்:- திருடியவனைப் பிடிக்கிறார் களோ இல்லையோ, திருட்டுக் கொடுத்த அந்தப் பெண்தலைமைக் காவலரை அழைத்து வந்து அவரது திறமையைப் பாராட்டி ரொக்கப் பரிசு, ஒருபடி பதவி உயர்வுகொடுத்து, முதலமைச் சரோடு புகைப்படமும் எடுத்து மறக்காமல் அனைத்து ஏடுகளிலும் வெளியிடச்செய்யலாம்!
கேள்வி :- மைலாப்பூரில் ஒரு வழக்கில், ஆவணங்களை ரகசியமாகத் தருவதற்காக 4000 ரூபாய்லஞ்சம் கேட்ட சிறப்பு எஸ்.ஐ. கைது செய்யப்பட்டிருக்கிறாரே?
கலைஞர் :- “4 ஆயிரம் ரூபாய் என்று ஏன் குறைவாக கேட்டாய்” என்பதற்காகத்தானே கைது செய்யப்பட்டிருக்கிறார்?
கேள்வி :- புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்திற்குள் சிறப்பு யாகம்செய்யப்பட்ட நிகழ்ச்சி புகைப்படத் தோடு ஏடுகளில் வெளிவந்திருக்கிறதே?
கலைஞர் :- மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குள் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் அதிகரித்த காரணத்தால், போலீசார் சேர்ந்து, காவல் நிலையத்திற்குள் சிறப்பு யாகம்நடத்தி யிருக் கிறார்கள். மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குள் மாத்திரமல்ல; தமிழகம் முழுவதிலுமே ஏராளமான கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தலைமைச் செயலகத்திற் குள்ளேயே சிறப் பான யாகம் நடத்தலாம்! இப்போது முதலமைச்சர் நிகடிநச்சி களிலே உரையாற்றும்போது “அண்ணா நாமம் வாழ்க!” என்றும், “எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!” என்றும் சொல்கிறார் அல்லவா; இனிமேல் “பெரியார் நாமம் வாழ்க!” என்றும் சேர்த்துக் கொள்ளலாம். காவல் நிலையத்தை “யாக சாலை”யாக மாற்றிய காவல் துறையினருக்கும் ரொக்கப் பரிசுகள், பதவி உயர்வுகள் வழங்கலாம்! தமிழர்களே! இதற்காகத்தானே அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தீர்கள்!
கேள்வி :- “ஏற்காட்டில் போலீஸ் வாகனம் மூலம் பணப் பரிமாற்றம் - தி.மு.க. வினரைக்கண்டதும் ஓட்டம் பிடித்த டிரைவர்” என்ற தலைப்பில் 20-11-2013 தேதிய “தினமலர்” செய்தி வெளியிட்டிருக்கிறதே?
கலைஞர் :- வாழ்க ஜனநாயகம்! ஓட்டம் பிடித்த டிரைவரைத் தேடிப் பிடித்து அவருக்கும் “ஓட்டப்பந்தய வீரர்” என்ற பட்டத்தையும், முடிந்தால் பதவி உயர்வையும் வழங்கலாம்.

0 Responses to தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் - பழ.நெடுமாறன் குறித்த கலைஞர் பதில்