Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிநாடுகளின் அழுத்தங்களுக்காக காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1990 ஆண்டு ஜுன் 10ம் திகதி முதல், 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரையில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்வதற்காக இந்த குழு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

இதுவரையில் இந்த ஆணைக்குழுவுக்கு 11 ஆயிரம் முறைபாடுகள் கிடைத்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டிலும், காணாமல் போனவர்கள் தொடர்பான அதிக முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறிப்;பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மிக அதிக முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் காணாமல் போன முப்படை வீரர்கள் குறித்த 6000 முறைபாடுகள்வரையில் கிடைத்துள்ளதாகவும், ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த முறைபாடுகள் தொடர்பில் விசாரண செய்ய மேலும் கால அவகாசம் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to காணாமல் போனோர் குறித்த விசாரணைகளை விரைவாக வேண்டிய அவசியம் இல்லை - ஆணைக்குழு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com