Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எமது அனுபவங்களை பகிர்ந்து விரைவில் தீர்வு காண்பதற்கு உதவ தயாராக இருப்பதாக தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைகளுக்கு விரைவில் முரண்பாடுகளற்ற தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கையில் பதற்றங்களை குறைக்கவும், பாதிப்புக்களை தணி வைப்பதற்கும் தென்னாபிரிக்கா தனது அனுபவங்களைப் பகிர தயாராக இருக்கிறது. ஏனெனில், அப்படியான சூழலை ஏற்கனவே வெற்றிகொண்ட அனுபவம் தென்னாபிரிக்காவுக்கு உண்டு. நாமும் உள்நாட்டு மோதல்களிலிருந்து வெளிவந்து சமாதானத்தின் பாதையில் பயணிக்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே, தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பெற்றுக்கொண்டு இனமுரண்பாடுக்களுக்கான தீ்ர்வினை பெற்றுக்கொள்வதற்காக தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எமது அனுபவங்களை பகிரத் தயார் - ஜேக்கப் ஸூமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com