Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டென்மார்க்கில் மாவீரர்நாள் மிகவும் உணர்புபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மாவீரர்நாள் நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமானது. அதன் பின்பு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மலர்வணக்கம் சுடர்வணக்கம் அகவணக்கம் நடைபெற்றது. தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அவர்களின் உறவுகளால் விளக்கேற்றும் பொழுது
மாவீரர் துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.



அதன்பின்பு பொதுமக்களால் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.மாவீரர்களின் எழுச்சிகானங்களோடு நிகழ்வு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் தியாகத்தை வீரத்தை உணர்த்தும் பாடலுக்கான எழுச்சி நடனங்கள் கவிதைகள் நாடகங்கள் சிறப்புப்பேச்சுகள் இடம்பெற்றன. உலகறிந்த எம்தலைவர் உரைப்பதையே உறுதி மொழியென ஏற்று உறுதிபூண்டு கொள்கை மாறாமல் உயிரை விட உரிமை மேலென நேசித்த உத்தமர்கள் மாவீர்கள் அம்மாவீர்களின் கனவு நிறைவேறும் வரை ஓயாது செயற்படுவோமென இளையோர்களால் உறுதி கூறப்பட்டது. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் மாவீரர் நாள் நிகழ்வு
நிறைவு பெற்றுது.

































































0 Responses to டென்மார்க்கில் மாவீரர்நாள் மிகவும் உணர்புபூர்வமாக அனுஸ்டிப்பு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com