Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக மாவீரர் தினம் எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை தியாகம் செய்து சாவினை தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழீழத்திற்காய் இன்னுயிர் ஈந்த மாவீரர்களின் படங்கள் காட்சிக்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த நிகழ்வில் ஆட்சி மன்ற உறுப்பினர் ஆறுச்சாமி அவர்கள் சுடரினை ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.



தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் 80களில் புலிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வெளியீட்டு செயலாளர் பொள்ளாச்சி மனோகரன் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பின்பு கோவையில் 1980 களில், பல ஈழ விடுதலைப்புலிகளுடன் பயிற்சியில் பங்குபெற்ற ஆறுச்சாமி அவர்கள் தலைவர் அவர்களுடன் கோவையில் இருந்த நிகழ்வுகளை உணர்வுபொங்க உரையாற்றினார். இறுதியில் சாஜித் நன்றி உரை கூறினார். இந்நிகழ்வில் ஏராளமான உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர். மாவீரர்களின் புகைப்பட கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.



0 Responses to கோவை காந்திபுரத்தில் உணர்வுபூர்வமான மாவீரர்நாள் வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com