Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நடைபெற்ற காமன்வெலத் மாநாட்டை சில நாடுகள் புறக்கணித்தது. இருப்பினும் சில நாடுகள் கலந்துகொள்வது ஆனால் அழுத்தமான செய்தி ஒன்றை கொண்டு செல்வது என்று முடிவெடுத்தார்கள். ஆனால் ஆரம்பம் முதலே இலங்கைக்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை தெரிவித்து வந்தது. அதிலும் சகல உறுப்பு நாடுகளும் இதில் பங்குபற்றவேண்டும் என்று அது இலங்கைக்கு சார்பாக அறிக்கைகளையும் வெளியிட்டது. இதில் முன்னணி வகித்தவர் அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் ஆகும். ஆனால் அவர் இலங்கையில் வைத்து தெரிவித்த கருத்து ஒன்றால் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார். பல மனித உரிமை அமைப்புகள் தற்போது போர்கொடி தூக்கியுள்ளார்கள்.

இலங்கையில் கடந்த 15ம் திகதி நடைபெற்ற காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாட்டில் , மாலை உரையாற்றிய டோனி அபோட்ஸ் இலங்கையில் சித்திரவதைகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். போதாக்குறைக்கு அது உண்மைக்கு புறம்பான செய்தி என்று வேறு மங்களம் பாடியுள்ளார். இவரது உரை தொடர்பாக செய்திகள் அப்போது வெளியானது. இருப்பினும் சரியான வீடியோ அல்லது ஆடியோ ஆதாரம் கிடைக்கப்பெறவில்லை. தற்போது குறித்த ஆதாரம் வெளியானதை அடுத்து, மனித உரிமை கண்காணிப்பு குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, ஆசிய மனித உரிமை கழகம் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் டோனி அபோட்ஸ் கூற்றுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள். இம்முறை அவர்கள் கண்டனம் தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை.

அவுஸ்திரேலிய பிரதமர் இக் கூற்றை திரும்பப் பெறவேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதாவது அவர் இலங்கையில் தெரிவித்த இக் கூற்றை அவர் திரும்பப் பெறவேண்டும் என்று தற்போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவரிடம் நேரடியாகவே நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தகுந்த பதிலை அவர் வழங்காது நழுவிக்கொண்டார். ஆனால் அவுஸ்திரேலிய எதிர்கட்சி மற்றும் கீரீன் கட்சிகள் இப் பிரச்சனையை தமது கைகளில் எடுக்கவுள்ளதாகவும், அவர்கள் பாராளுமன்றில் இக் கேள்விகளை எழுப்பவுள்ளதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. ஒட்டு மொத்தத்தில் அவுஸ்திரேலியப் பிரதமர் வாங்கிக்கட்டிக்கொண்டார் எனபதே உண்மையாகும்.

0 Responses to இலங்கையில் கருத்து தெரிவித்து வாங்கிக் கட்டிய அவுஸ்திரேலிய பிரதமர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com