மகனே…
உன்னை சுமக்கையில்
மனதில் ஆனந்தம் - நீ
தாயகப் போரில் வரலாற்று காவியம்
படைத்தபோதும்
கனத்த மனத்தோடு வித்துடலை
கண்ணீரால் கழுவினேன்
தமிழர் வீரத்தின் விழுதாய்
உன்னை போற்றியதும்
பெருமைகொண்டேன் பெற்றெடுத்ததிற்காய்..
ஆனந்தம் ஆனந்தம்.
சொந்த ஊர் இழந்தோம்
வாழும் உரிமை பறிக்கப்பட்டோம் - நீ
இல்லாத உலகை வெறுத்தேன்
உன் நிழலைத் தேடி
கல்லறையில் தவம் கிடந்தேன்
உனக்கும் துயிலும் இல்லமில்லை
ஏனக்கோ துயிலவே இல்லமில்லை
தனிமையில் அவதியாய்
அகதிமுகாமில் அ+தரவற்று
ஒரு சாண் வயிற்றை நிரப்புவதற்காய்
தினம்தோறும் வரிசையில்
கால்கள் சுயநினைவிழக்க
கண்கள் பார்வை விம்பங்களை
பறிகொடுத்து நிற்கிறதடா…
தனிமையில்
தனித்த மரத்தடி நிழலில்
இளமையின் கனவுகளோடு
தொலைவில் தெரிந்த விம்பங்களை
கண்கள் ஒரு முறை
மீட்டுக் கொண்டன
தமிழீழம் மலருகையில்
நீங்கள் கதவை திறவாது
உமக்கான கதவுகளை
திறக்கும் வித்தைகளை கற்கவேண்டுமென
ஆங்கிலம் கற்றாய் அண்ணன் சொன்னதாய்
காற்றின் சீண்டலால்
கண்களில் கண்ணீர் முட்டியது
கண்ட இராணுவச் சிப்பாய்
உன்னை விசாரிக்க தொடங்கி
சிறைவாசம் இருந்தெனடா
தள்ளாத வயதிலும்
கார்த்திகையும் பூர்த்தது
எதிரியின் கழுகுப் பார்வை
முகாமதில் ஆழ ஊடுருவியது
என் உதிரத்தில் பூர்த்த
சிறுத்தை மலரே…
உனை நினைந்துருகி
கண்ணீரிட உரிமையில்லை
உனக்காய் ஒளித்தீபமெற்ற சுதந்திரமில்லை
உணவில் ஒரு கவளமிட்டு
வணங்க நாதியில்லை
இளமையும் உதிர்ந்து போனது
முதுமையின் கிறுக்கல்கள்
உடலை விழுங்கி விட்டது
நீ இருந்த கருவறையும்
வெறுமையாய் சுருக்கிட்டு கொண்டதடா
இல்லையேல் பெற்றிடுவேன்
உன்னைப்போல் ஆயிரமாயிரம்
வீரமறவர்களை….
இயலாமை எம்மினத்தை
குடி கொண்டு விட்டதடா
நிம்மதி பெருமூச்செறிய நித்தம்
மனம் சத்தம் போடுதடா
சுத்தமாய் பிடிக்கவில்லையடா
ஈழத்தமிழ் ஈனப்பிறவி..
-ஞானமணாளன்-
உன்னை சுமக்கையில்
மனதில் ஆனந்தம் - நீ
தாயகப் போரில் வரலாற்று காவியம்
படைத்தபோதும்
கனத்த மனத்தோடு வித்துடலை
கண்ணீரால் கழுவினேன்
தமிழர் வீரத்தின் விழுதாய்
உன்னை போற்றியதும்
பெருமைகொண்டேன் பெற்றெடுத்ததிற்காய்..
ஆனந்தம் ஆனந்தம்.
சொந்த ஊர் இழந்தோம்
வாழும் உரிமை பறிக்கப்பட்டோம் - நீ
இல்லாத உலகை வெறுத்தேன்
உன் நிழலைத் தேடி
கல்லறையில் தவம் கிடந்தேன்
உனக்கும் துயிலும் இல்லமில்லை
ஏனக்கோ துயிலவே இல்லமில்லை
தனிமையில் அவதியாய்
அகதிமுகாமில் அ+தரவற்று
ஒரு சாண் வயிற்றை நிரப்புவதற்காய்
தினம்தோறும் வரிசையில்
கால்கள் சுயநினைவிழக்க
கண்கள் பார்வை விம்பங்களை
பறிகொடுத்து நிற்கிறதடா…
தனிமையில்
தனித்த மரத்தடி நிழலில்
இளமையின் கனவுகளோடு
தொலைவில் தெரிந்த விம்பங்களை
கண்கள் ஒரு முறை
மீட்டுக் கொண்டன
தமிழீழம் மலருகையில்
நீங்கள் கதவை திறவாது
உமக்கான கதவுகளை
திறக்கும் வித்தைகளை கற்கவேண்டுமென
ஆங்கிலம் கற்றாய் அண்ணன் சொன்னதாய்
காற்றின் சீண்டலால்
கண்களில் கண்ணீர் முட்டியது
கண்ட இராணுவச் சிப்பாய்
உன்னை விசாரிக்க தொடங்கி
சிறைவாசம் இருந்தெனடா
தள்ளாத வயதிலும்
கார்த்திகையும் பூர்த்தது
எதிரியின் கழுகுப் பார்வை
முகாமதில் ஆழ ஊடுருவியது
என் உதிரத்தில் பூர்த்த
சிறுத்தை மலரே…
உனை நினைந்துருகி
கண்ணீரிட உரிமையில்லை
உனக்காய் ஒளித்தீபமெற்ற சுதந்திரமில்லை
உணவில் ஒரு கவளமிட்டு
வணங்க நாதியில்லை
இளமையும் உதிர்ந்து போனது
முதுமையின் கிறுக்கல்கள்
உடலை விழுங்கி விட்டது
நீ இருந்த கருவறையும்
வெறுமையாய் சுருக்கிட்டு கொண்டதடா
இல்லையேல் பெற்றிடுவேன்
உன்னைப்போல் ஆயிரமாயிரம்
வீரமறவர்களை….
இயலாமை எம்மினத்தை
குடி கொண்டு விட்டதடா
நிம்மதி பெருமூச்செறிய நித்தம்
மனம் சத்தம் போடுதடா
சுத்தமாய் பிடிக்கவில்லையடா
ஈழத்தமிழ் ஈனப்பிறவி..
-ஞானமணாளன்-



0 Responses to இனியும் வேண்டுவதோ… ஈனத் தமிழ்ப் பிறவி - ஞானமணாளன்