ஏற்காடு தொகுதி தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது புகார் வந்துள்ளதாகவும், இது குறித்து நாளை மலை 5 மணிக்குள் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் பிரவீன் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தெரிய வருகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஏற்காடு இடைத் தேர்தலுக்கு, அதிமுக வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து ஏற்காட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் முதல்வர் ஜெயலலிதா.
அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி, பிரச்சாரத்தின் போது புதிய நலத் திட்டங்களை ஜெயலலிதா அறிவித்ததாக, தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு புகார் கடிதம் வந்துள்ளது என்றும் இந்தப் புகார் கடிதம் தொடர்பாக ஜெயலலிதா நாளை மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகத் தேர்தல் ஆணையத் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்காடு தொகுதிக்கு இடைத் தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ளது என்பதும், இன்று மாலை 5 மணியோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to நாளை 5 மணிக்குள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும்:தேர்தல் ஆணையம்!