Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டு கோவணத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் இடம்பெற்ற போராட்டத்தை அகில இலங்கை கமநல சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.

விவசாயிகளுக்கு சரியான மானியங்களை வழங்காமை மற்றும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமை மற்றும் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் “விவசாயிகளுக்கு ஒய்வூதியம் வழங்கும் வயதை அறுபதிலிருந்து அறுபத்துமூன்றாக உயர்த்தியமை“ உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே விவசாயிகள் கோவணத்துடன் போராட்டம் நடத்தினர்.

வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்புக்கு முந்திய குழுநிலை விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், விவசாயிகள் கோவணத்துடன் போராட்டத்தை முன்னெடுத்தமை அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

0 Responses to மஹிந்தவின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் கோவணத்துடன் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com