இறுதி மோதல்கள் இடம்பெற்ற 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களினால் கைவிடப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இருப்புக்காக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வன்னியின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இறுதி மோதல்களில் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்களது மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரங்கள் மற்றும் வான்கள் உள்ளிட்ட வாகனங்களை மோதல்களின் உக்கிரத்தினால் ஆங்காங்கே விட்டு சென்றனர். அதில், பெருமளவு வாகனங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே கைவிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் மீளவும் பகுதி பகுதியாக குடியேற்றப்பட்ட போது மக்களிடம் திருப்பவும் வாகனங்களை கையளிப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட செயகத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து மீட்கப்பட்ட பெருமளவு வாகனங்கள் கிளிநொச்சியின் திருநகர் பகுதியில் 2010ஆம் ஆண்டு வைப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, கிளிநொச்சி மாவட்ட செயலகம் பெருமளவு வாகனங்களை அண்மையில் இருப்புக்காக ஏல விற்பனை செய்துள்ளது. இதனால், இறுதி மோதல்களின் போது தமது வாகனங்களை கைவிட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனிடையே, மோதல்களின் போது இழந்த உடமைகளுக்கான இழப்பீடு தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவித உறுதிப்பாடும் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இறுதி மோதல்களின் போது கைவிடப்பட்ட பொதுமக்களின் வாகனங்கள் இருப்புக்காக விற்பனை