Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பத்திரிகையொன்றின் வன்னிப்பிராந்தியச்செய்தியாளர்  நேற்று மாலை 5.30 மணியளவில் அவரது வீட்டில் வைத்து மூவரால் மோசமாகத் தாக்கப்படடுள்ளனர். தலையில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த செய்தியாளரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் செய்தியாளரை வீட்டுக்கு வெளியே வருமாறு அழைத்தனர். அவர் வாசலுக்கு வந்ததும் அவர் மீது கொட்டன்களால் சரமாரியாகத் தாக்கினர். அவ்வேளையினில் செய்தியாளர் குக்கூரலிட்டு கத்தியுதவி கோரியுள்ளார்.தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோட முற்படுகையில் அயலவர்களால் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மற்றையவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் அதே ஊரை சேர்ந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.   அரசியல் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினரது தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான இவர் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னணி குறித்தும் தாக்குதலின் பின்னால் உள்ள அரசியல் தொடர்பு குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to பத்திரிகையாளர் மீது வன்னியினில் தாக்குதல்! தாக்குதலாளிகள் எம்.பியொருவரது ஆதரவாளர்களாம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com