Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இராணுவப்பாதுகாப்பு வலயப்பகுதியினில் மனிதப்புதைகுழி தோண்டும் நடவடிக்கை நாளை திங்கட்கிழமையும் தொடரவுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை 10 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இரண்டாவது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மனித புதை குழி தோண்டப்பட்டு மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தது.இப்பகுதியை சூழ படையினர் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ள நிலையினில் காணாமல் போன தமிழர்களது இளைஞர் யுவதிகளது சடல எச்சங்களாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து குறித்த பகுதியில் நேற்று   சனிக்கிழமை  மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மனித புதைகுழிகள் தோண்டும்; பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.கடந்த  வெள்ளிக்கிழமை மாலை தோண்டப்பட்ட போது மூன்று மனித மண்டையோடுகளும்,ஏனைய  பாகங்களும் மீட்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று   சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நீதவான்  ஆனந்தி கனகரட்ணம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.பின் மன்னார்  நீதவான் மற்றும்; சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட புதை குழி தோண்டப்பட்டது.இதன் போது மேலும் சிதைவடைந்த நிலையில் துண்டு துண்டுகளாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை மேலும் இரண்டு மண்டையோடுகளும்,மனித எச்சங்களும் மீட்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாவது நாளகவும் மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதைகுழி தோண்டப்பட்டது.இது வரை 10 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை மனித புதை குழி தோண்டப்பட்ட நிலையில் தற்போது குறித்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.குறித்த மனித புதை குழி தோண்டும் பணிகள் நாளை திங்கட்கிழமை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது.

0 Responses to பத்தினை தாண்டியது சடல எச்சங்கள்! மன்னாரினில் நாளையும் தொடரும் தோண்டுதல்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com