ஏற்காட்டில் உயிரிழந்த திமுக பிரமுகரின் உடலை அவரது உறவினர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்காடு இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக, அதிமுக பேரணி ஒரே நாளில் ஒரே இடத்தில் நடைபெற்றது. இந்த பேரணியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, விழுப்புரத்தை சேர்ந்த திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜமுருகன் உயிரிழந்தார்.
இதற்கு காவல்துறையினரே காரணம் என்று திமுகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்த நிலையில், ராஜ் முருகன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3 நாட்கள் பாதுகாத்து வைக்கப் பட்டது.
இதை அடுத்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் முருகனது உடலை அவரது உறவினர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், காவல்துறையினரின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றால், வேண்டுமானால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to ஏற்காட்டில் உயிரிழந்த திமுக பிரமுகரின் உடலை ஒப்படைக்க வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம்