Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காத் துணை இராணுவக் குழுவினால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மாமனிதருமான ஜோசப் பரராஜசிங்கத்தின் எட்டாவது ஆண்டு நினைவுதினம் இன்று புதன்கிழயமை மாலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தலைவர்கள், உறுப்பினர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரின்ஸ் காசிநாதர், த.கனகசபை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேநேரம் ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் சிவயோகச்செல்வன் சிவஸ்ரீ சாம்பசிவ குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சேயோன் தலைமையில் நடைபெற்றது.

0 Responses to மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் நினைவு கூரப்பட்டார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com