Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேரறிவாளன் வாக்கு மூலத்தை மாற்றிப் பதிவு செய்ததாக ஒப்புக் கொண்டுள்ள சிபிஐ முன்னாள் அதிகாரி தடா  நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கலாகி உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி தியாகராஜன் சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, பேரறிவாளன் வாக்குமூலத்தை ஆங்கிலத்தில் பதிவு செய்யும் போது, கொலைக் குற்றத்துக்கு ஆதாரமாக மாற்றி பதிவு செய்து விட்டதாகவும், இன்றுவரை தம் மனதை இந்த சம்பவம் அரித்துக் கொண்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து தியாகராஜனை தடா  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கலாகி உள்ளது. அந்த மனுவில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ள தியாகராஜன் தடா  நீதிமன்றத்தில் ஆஜராகி அவரது விசாரணையை சிபிஐ நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டு உள்ளது.

இதை அடுத்து இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வழக்கை அடுத்த மாதம்  17ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார் என்று தெரிய வருகிறது.

0 Responses to பேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றிப் பதிவு செய்த சிபிஐ முன்னாள் அதிகாரி தடா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்!:புதிய மனு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com