வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பெண்ணுரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 214 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் மன்னார் மாவட்டத்திலேயே அதிகப்படியான பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து பிரசாரமும், பேரணியும் இன்று வியாழக்கிழமை மன்னாரில் இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய போதே மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அம்பாறையில் 19 வன்முறைகளும், மட்டக்களப்பில் 37, வவுனியா 46, மன்னார் 49, முல்லைத்தீவு 10, கிளிநொச்சி 09, யாழ்ப்பாணம் 44 என மொத்தமாக 214 பாலியல் வன்முறை சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 Responses to வடக்கு கிழக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு