எதிர்வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையிலான அமெரிக்காவின் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன்போது அடுத்த மனித உரிமைகள் மாநாட்டின் அமர்வு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தவேளையில், அமெரிக்க பிரதிநிதிகளால் அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ள இலங்கைக்கு எதிரான மற்றுமொரு பிரேரணை தொடர்பிலும் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை வலியுறுத்தவுள்ளது அமெரிக்கா!!