Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன் கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. அண்மையில், உண்மைகளைக் கண்டறியும் பணி நிமிர்த்தமாக இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஐhன் லோகி அவர்கள் கூறுவதைக் கேட்பதற்காக நாம் எல்லோரும் அங்கே கூடிநின்றோம். அந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினராலும் (the National Council of New Zealand Tamils and the Green Party)) இணைந்து நடாத்தப்பட்டது, அத்துடன் அங்கு வருகை தந்திருந்த மக்கள் கூட்டத்தினர் இரு அமைப்புக்களின் ஆதரவாளர்களைக் கொண்ட ஓர் மகிழ்ச்சியான கலவையாக இருந்தது.

வரவேற்பு உரையையும் தொடக்க உரையையும் தொடர்ந்து, கெய்த் லொக்கெ (Keith Locke) அவர்கள் சில பயனுள்ள பின்னணித் தகவல்களை வழங்கினார்; 2003 இல் இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவர் அங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவருடைய உரையில் மிகவும் உறைக்கக்கூடிய விடயம், இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போதான வல்லாதிக்க சர்வதேசத்தின் கதையை முற்றிலும் மறுதலிக்கின்றமை ஆகும்.



அங்கே போர் நடத்தவேண்டிய தேவை இருந்ததாகவும் அது பயங்கரவாதிகளுக்கு எதிரான அல்லது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கின்றதுமான ஓர் எண்ணம் எங்கும் பரவலாக நிலவுகின்றது. இந்த குற்றச் சாட்டுக்கள் எதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உண்மை சற்று வேறாக இருப்பதைக் காண்பதற்கு நீங்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. அங்கு எல்லாப் பக்கங்களிலும் பயங்கரத் தந்திரங்களே பயன்படுத்தப்ப பட்டுள்ளன் அத்துடன் அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தின் விழைவாகவே தமிழ்ப் புலிகளின் பலமும் வளர்ச்சியும் தூண்டப்பட்டது.'

என்றார் கெய்த் லொக்கெ

லோகி அவர்கள், இலங்கை அரசின் கடந்தகால பதிவுகளின் காரணமாக தாம் அங்கு பயணம் செய்வதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய செனட்டர் லீ றிஹியானனும் தானும் நுழைவுச் சீட்டுக்கள் தொடர்பான அறிவுரையை கவனமாகக் கேட்டறிந்ததாக விளக்கினார். அண்மையில் இரு ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் 15 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின் நாடு கடத்தப்பட்டிருந்தனர் - மகிந்த இராஜபக்ச அரசு பேச்சுக்கான சுதந்திரத்தை சிறிதேனும் மதிக்கவில்லை என்பது சர்வதேச மட்டத்தில் பெருவாரியாக ஏற்றுகொள்ளப்படுகிறது.

'நியூசிலாந்து அமைச்சரினதும் ஆஸ்திரேலிய செனட்டரினதும் ஊடகவியலாளர் மாநாட்டைத் தடுத்து நிறுத்துவது என்பது நுழைவுச் சீட்டுடன் தொடர்பான பிரச்சனை இல்லை; அது பேச்சுச் சுதந்திரத்தை மீறுகின்ற முற்றிலும் கீழ்த்தரமான செயலாகும்.'

என்றார் கெய்த் லொக்கெ

நடந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து பேச வந்தபோது மண்டபம் எங்கும் போதிய வெறுப்பின் வெளிப்பாடுகளும் அதிருப்தியும் கொண்ட சூழல் நிலவியது. மனித உரிமைகள் விடயத்தில் உண்மைகளைக் கண்டறியும் பணிக்காக சனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட ஓர் அமைச்சரை இலங்கையில் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்ட செயலுக்கு பிரதமர் ஜோன் கேய் மற்றும் வெளி வவகார அமைச்சர் முறாய் மைக்குலி ஆகியோரும் சிறப்பாக துணைபோயிருந்தனர். அது இறையாண்மைக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றமாக பார்க்கப்பட முடியும் - குறைந்த பட்சம் இதுவொரு பாதிப்பை உண்டாக்கக்கூடிய, திமிர்பிடித்த வன்செயலாகும்.

அவர் தொடர்ந்து பேசுகையில், இலங்கை அரசால் ஒரு திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் சிலவற்றை வெளியிட்டார். தமிழ்ச் சிறுவர்கள் தமது குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறப்பு வீடுகளில் தங்கவைக்கப் பட்டுள்ளனர், அங்கே அவர்கள் சிங்களம் மட்டும் கற்பிக்கப்படுகின்றனர் அத்துடன் சிலர் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். அந்த குடும்பத்தினர் காவற்றுறையிடம் சென்று முறையிட்ட போது நடவடிக்கை எடுக்கப்படாமை மட்டுமல்லாது, இந்த மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இராணுவப் பாதுகாப்புடன் வீதிகளில் சுதந்திரமாகத் திரிவது காணப்பட்டது. அரசியற் செயல்நோக்கம் கொண்ட பாலியல் வன்முறை  மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் என்பன 'மிகவும் பொதுவான மீறல்களாக இருக்கையில், இதற்கு ஐ.நா. மற்றும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் என்பவற்றிடமிருந்து வெளியான அனைத்து (போதிய அளுத்தமற்ற) வெளியக அறிக்கைகள் மூலம் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது.

'பத்து மாதங்களாக சிறையிலிருக்கும் ஒருவரோடு நாங்கள் பேசினோம், அவர் எந்தவித குற்றமும் சுமத்தப்படாது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.'

என்றார் ஜான் லோகி.

தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மற்றுமொரு விடயமாக ஆழமான பக்கச்சார்பு கொண்ட, நீதிக்குப் புறம்பான நீதிமுறைமையால் ஏமாற்றறப்படுவது காணப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் தலைமை நீதியரசரை நீக்கி, தனது சொந்த சட்ட ஆலோசகரை அந்தப் பதவியில் அமர்த்தியது. 'காவற்றுறை மற்றும் நீதிமன்ற முறைமையின் மீதான நம்பகத்தன்மை அடிமட்டத்தோடே குழிபறிக்கப்பட்டுள்ளது' வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளது. பொதுமக்கள் சாட்சிகள் வழங்குவதை மறைமுகமாக பதிவு செய்யக்கூடிய வகையில் கட்டடங்களில் ஒட்டுக்கேட்கும் இரகசியக் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் நிலவுகின்றன. தேர்தல்கள் சுதந்திரமானதாக நடத்தப் பட்டிருக்கவில்லை. பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என காவற்றுறையால் அச்சுறுத்தப்பட்டு, வாக்களிக்காது தடுக்கப்பட்டுள்ளனர்.

'எனவே, அங்கு சுதந்திரமான நீதிமுறைமை இல்லை, ஊடகம் இல்லை அல்லது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஊடகம், பிரச்சனைகளைக் கூடிக் கதைக்கின்ற அல்லது பிரச்சினைகள் குறித்து ஒழுங்குகளை மேற்கொள்கின்ற மக்கள் வழக்கமாக அச்சுறுத்தப்படுதல் அல்லது துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுதல். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் உள்ளுர் மக்கள் இடப்பெயர்வு என்பது செயற்பாட்டில் உள்ள ஒரு நிகழ்ச்சிநிரலாக உள்ளது. அது – தமிழர்கள் மற்றும் சிங்களவர்களிடமிருந்து கிடைத்த – தொடர்ச்சியான தகவலாக இருந்தது. சொந்த நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் மனித உரிமைகளுக்காகப் போராடுகின்ற எமது மரபை நியூசிலாந்து பின்பற்றும் என்பது எனது நம்பிக்கை. தங்களால் பேசமுடியாத மக்களுக்காக, பேசுவதற்கான கடமை எங்களுக்கு உண்டு.'

என்றார் ஜான் லோகி

மனித உரிமைகளை நாம் பாதுகாக்கிறோம் என்பது காட்டப்பட வேண்டுமானால், நற்பேறின்றி நியூசிலாந்து அரசு மிகவும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் ஜோன் கேய் காணாமற்போனோர் குறித்து கேள்வி எழுப்பியிருந்த போதிலும், அவர் இராஜபக்ச மீது குற்றம் சுமத்தவில்லை. பிருத்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து தனது குற்றச்சாட்டுக்களை தலைப்புச் செய்திகள் ஊடாக வெளிப்படுத்தினார்; அத்துடன் கனடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்திருந்தார்; எமது நாட்டுப் பிரதமரின் நிலைப்பாடு உண்மையாகவே  வேறுவிதமாக இருப்பதை தெரிவிக்கிறது. 'மக்கள் தற்பொழுது சுதந்திரத்தை உணர்கிறார்கள்' மற்றும் 'எல்லாப் பிரச்சனைகளின் சரி-பிளைகளை ஆராய்வது எமக்கான வேலை அல்ல' என்பது போன்ற திகைப்பை ஏற்படுத்தும் கருத்தை பிரதமர் கேய் கொண்டுள்ளார்.

பிருத்தானியப் பிரதமர் வடக்கில் தான் சந்தித்த அந்த மக்களின் 'உருகவைக்கும்' அனுபவங்களை பேசிய வேளை, மைக்குலி புதிய வீதிகள் பற்றி உரையாடினார். தேசிய அமைச்சர் கன்வல்ஜித் சிங் பக்சியும் கூட இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டினார்; அவர்களுடைய மீழ்குடியேற்ற திட்டம் 'கவனத்தை ஈர்ப்பதாகவும்' அத்துடன் 'சரியான திசையில் செல்வதாகவும்' தெரிவித்தார். பிரதமர் கேய் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்வதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளார், அத்துடன ஜான் லோகி அவர்கள் தனது உண்மைகளைக் கண்டறியும் பணியின் போது ஆதரவு வழங்கவில்லை. உண்மைகளைக் கண்டறிந்து தகவல் பரிமாற்றம் செய்ய முன்வரும்போது ஒருவேளை எமது அரசாங்கம் இலங்கையைக் காட்டிலும் அதிகம் சிறப்பாக செயற்படவில்லைப் போலும்.

அந்த ஒன்றுகூடல் நடைபெற்று இரண்டாம் நாளில், சர்வதேச மன்னிப்புச் சபை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது; அதில் லோகி அவர்களின் உணர்வுகள் எதிரொலித்திருந்ததுடன், பொதுநலவாய மாநாட்டில் ஜோன் கேயின் செயற்றிறன் ஒரு 'தோல்வி' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

'ஒரு கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டின் மீது சுயநலப் போக்கான அக்கறையை தெரிவுசெய்வதன் மூலமும், போர்க் குற்றங்களை புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஒரு நாட்டு அரசாங்கத்துக்கு தனது ஒத்துளைப்பை செயல்திறனோடு வழங்குவதன் மூலமும், ஜோன் கேய் (எமது தராதரங்களைப் பாதுகாப்பதற்கான) அந்த நல்வாய்ப்பை இழந்திருப்பதுடன், இதன் மூலம் அவர் நியூசிலாந்து நாட்டுக்கு தவறிழைத்துள்ளார்.'

 -    சர்வதேச மன்னிப்புச் சபை நிறைவேற்று இயக்குநர் கிறான்ட் பைல்டன்.

மூலம்:- பிலிப் நன்னெஸ்ரட்

தமிழாக்கம்: கலைவண்ணன்

0 Responses to நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்றுதிரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com