Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் விசா முறைகேடு செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகாடே ஐ.நா.வி.ன தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ஐ.நா. தூதருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றியவர் தேவயானி கோப்ரகாடே. வீட்டு வேலைக்காக பணிப்பெண்ணை உறவினர் என்ற பெயரில் போலி ஆவணங்களை கொடுத்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்தது, முறையான சம்பளம் அளிக்காதது உள்ளிட்டவை தொடர்பாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, நியூயார்க்கில் பொது இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவரது ஆடைகளை களைத்து சோதனையிடப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் தேவயானியை வழக்கில் இருநது காப்பாற்ற முடியாது என அமெரிக்கா கூறி வந்தது.

வியன்னா உடன்படிக்கையின்படி, தூதரகப் பணியில் உள்ள தேவயானிக்கு விலக்குரிமை உள்ளிட்ட சலுகைகளை தர முடியாது என அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து அவரை ஐ.நா. தூதரகத்தில் நிரந்தர ஆலோசகராக நியமித்து, இந்தியா கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது.

இதன் மூலம் அவருக்கு விலக்குரிமை உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உருவானது. இந்த நிலையில், தற்போது தேவயானி கோப்ரகடேவுக்கு ஐ.நா. தூதருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கியதை அமெரிக்க வெளியுறவுத்துறையின் கீழ் இயங்கும் தூதரக அதிகாரிகள் உறுதி செய்தனர். இதன் மூலம், தேவயானிக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படுள்ளது.

0 Responses to தேவயானிக்கு ஐ.நா. தூதருக்கான அடையாள அட்டை! கூடுதல் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com