Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேமுதிக சார்பில் 23.12.2013 திங்கள்கிழமை அக்கட்சியின் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்,

கட்சியை விட்டு விலகி சென்றவர்களை எனக்கு முன்பு பேசியவர்கள் திட்டினார்கள். அவர்களை திட்டாமல் வாழ்த்தியா அனுப்ப முடியும். எதற்காக ஜெயலலிதாவை பார்த்து எல்லோரும் பயப்படுகிறீர்கள். அவர் 5 ஆண்டு காலம் கொடநாட்டில் ஓய்வு எடுத்தார். தேர்தல் நடைபெறும்போது கடைசி 5 மாதங்கள் வெளியில் வந்தார். ஆட்சியில் இல்லாதபோது அவர் மக்களை சந்திக்கவில்லை.

தமிழகம் முழுவதும் இன்று இருட்டாக உள்ளது. ஆட்சி வந்த 3 மாதத்தில் மின்சாரத்தை சரிபடுத்துகிறேன் என்று கூறினார். அவரது அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒரு படி மேலே போய் வானத்தில் கூட மின்வெட்டு இருக்கும். தமிழகத்தில இருக்காது என்றார். ஆனால் இன்று தமிழகமே இருட்டாக உள்ளது.

ஏற்காடு தொகுதியில் வெற்றி பெற்றதை பெருமையாக பேசுகிறார்கள். பெண்ணாகரம் தொகுதியில் டெபாசிட் இழந்தவர்கள் தானே இவர்கள். கார்நாடகத்தில் 6 தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் பறிபோனவர்கள்தானே இவர்கள்.

தேமுதிக இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறது. ஏற்கனவே ரம்ஜான் பண்டிகையும் கொண்டாடினோம். அடுத்து வரப்போகிற பொங்களல் பண்டிகையை கொண்டாடப்போகிறோம். எல்லா மதமும், ஜாதியும் தேமுதிகவிற்கு சமம். எம்மதமும் சம்மதமே என்று முன்னோர்கள் கூறியுள்ளனனர். மக்களும், தெய்வமும் இருக்கும்வரை தேமுதிகவை யாரும் அசைக்க முடியாது.

தே.மு.தி.க.வில் மரங்கள் பட்டுபோய் விட்டதாக மற்றவர்கள் குறை சொல்கிறார்கள். பட்டுபோன மரங்கள் தான் மீண்டும் துளிர்க்கும். அது போல தான் தே.மு.தி.மு.க. மீண்டும் துளிர் விடப் போகிறது. கட்சியில் இருந்து போனவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.

இங்கு பேசிய பேராயர் எஸ்ரா சற்குணம் நீங்கள் கேப்டனாக இருக்கிறீர்கள். உங்களுக்கு இன்னொரு கேப்டன் தேவைப்படுகிறது. ஒரு விமானத்தில் 2 கேப்டன்கள் இருப்பார்கள். ஒரு கேப்டனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் இன்னொரு கேப்டன் தான் காப்பாற்றுவார். எனவே இன்னொரு கேப்டன் சேர்த்து கொள்வது தவறு இல்லை என்றார். அதனால் நான் அவரது கருத்தை பரிசீலித்து முடிவெடுப்பேன்.

பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டாம் என எஸ்றா சற்குணம் கேட்டுக் கொண்டார். அதை நான் கண்டிப்பாக பரிசீலிப்பேன்.  வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்த்து பலமான கூட்டணி அமைப்பேன் என்றார். இவ்வாறு பேசினார்.

முன்னதாக இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய சமூக நீதி இயக்கத்தின் பிரதம பேராயர் எஸ்றா சற்குணம்,

தேமுதிக கட்சியில் இருந்து சிலர் விலகி சென்றார்கள். உடனே அந்தக் கட்சி கரைந்துபோய் கொண்டிருக்கிறது என்று பேசுகிறார்கள். ஒரு வயக்காட்டில் களைகள் அகற்றப்பட்ட பின்புதான் விளைச்சல் அமோகமாக இருக்கும். இதுபோல் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவில் இருந்த கூட்டத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.

கடந்த முறை கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டபோது அவரை நல்லவர்களோடும், வல்லவர்களோடும் சேர்ந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தேன். ஒரு விமானத்திற்கு இரண்டு கேப்டன்கள் உண்டு. பெரிய விமானங்களுக்கு 3 கேப்டன்கள் உண்டு. அதுபோல் விஜயகாந்த் வேறு சில கேப்டன்களையும் சேர்த்துக்கொள்வதில் தவறு இல்லை. வெள்ளை உள்ளம் படைத்த கருப்பு எம்.ஜி.ஆர். கேப்டன். பிஜேபி என்றால் பிராமண ஜாதி பார்ட்டி என சொல்பவர்கள் உண்டு. ஆகவே விஜயகாந்த் நல்லவர்களோடு சேர வேண்டும்.  என்றார்.

0 Responses to எதற்காக ஜெயலலிதாவை பார்த்து எல்லோரும் பயப்படுகிறீர்கள்? விஜயகாந்த் பேச்சு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com