Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடலில் முற்றாக மூழ்கிய கப்பலிலிருந்து மூன்று நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட ஒருவரைப் பற்றிய வீடியோவும், தகவலும் பெரும் ஊடக கவன்ம் பெற்றுள்ளது.

நைஜீரியா அருகே அட்லாண்டிக் கடலில் மூழ்கிய இக்கப்பலில், ஓர் அறையில் மாத்திரம் ஆட்சிசன் இருந்ததால்,  அந்த அறையிலேயே மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய படி கடவுள் காப்பாற்றுவார் எனும் சிறிய நம்பிக்கையில் இருந்திருக்கிறார் நைஜீரியாரான ஹாரிசன் ஒட்ஜெக்பா.

கடுங்குளிர் நீரில் பாக்ஸர் காற்சட்டை ஒன்றுடன் மேல் ஆடை ஒன்றும் இன்றி, 72 மணிநேரமாக போராடியபடி இவர் இருந்துள்ளார். அதிஷ்டவசமாக டாச்லாந்து நிறுவனம் ஒன்றின் கடல் மூழ்கி வீரர் குழுவினர் 120 கி.மீ தொலைவில்  எண்ணெய் வள பகுதி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தனர். இப்படகில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மிதந்துவருவதை பார்தததும் இப்பகுதி நோக்கி விரைந்துளனர்.

குறித்த படகின் அருகில் சென்றதும் முதலாவதாக ஹாரிசனின் கைகள் மாத்திரம் அடைந்த படி இருந்தை கண்ட ஒரு கடல் மூழ்கி வீரர், அவரும் இறந்துவிட்டதாக கருதியிருக்கிறார். ஆனால் தனது கையை அருகில் கொண்டு சென்ற போது ஹாரிசன் இவரது கையைப் பிடித்ததும், ஹாரிசன் இன்னமும் உயிருடன் இருப்பதை உணர்ந்திருக்கிறார்.

இவரை மீட்டெடுக்கும் வீடியோ, ஆறு மாதங்களுக்கு முன்னரே யூடியூப்பில் வெளிவந்த போதும் தற்போதே இணையத்தில் பெரும் பரபரப்பாகியுள்ளது.  அதிஷ்டவசமாக ஆக்சிசன் காற்றிருக்கும் அறையிலேயே ஹாரிசன் இருந்ததாகவும், ஆனால் துரதிஷ்டவசமாக அவர் சுவாசித்துக் கொண்டிருந்த காற்று முடியப் போகும் தருவாயில் இருந்ததாகவும் மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் வீடியோவைப் பார்பவர்களுக்கு கடவுள் மீதான நம்பிக்கை தோன்றலாம், தொடரலாம்.

0 Responses to கடலில் முற்றாக மூழ்கிய கப்பலிலிருந்து மூன்று நாட்களின் பின் நைஜீரியர் உயிருடன் மீட்கப்பட்ட தருணம் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com