மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் மீண்டும் மனித புதைகுழி அகழும் பணி
சனிக்கிழமை இன்று ஆரம்பமாகியுள்ள நிலையினில் அவை மன்னார் பாப்பாமோட்டை
பகுதியினில் கணாமல் போனவர்களதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 1991ம் ஆண்டின்
ஜூன் மாதம் இலங்கை இராணுவத்தின் ரணகோச நடவடிக்கையின் போது காணாமல்
போனவர்களே படுகொலை செய்யப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டும் பணி ஆரம்பமாகியுள்ளது.இன்றும் மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சிலவும் புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மனித எழும்புக்கூடுகள் மீட்கும் பணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த வெள்ளிக்கிழமை (20) ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியில் இருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் நீர் இணைப்பிற்காக பள்ளம் தோண்டிய போது மூன்று மண்டையோடுகளும் மனித எழும்புகளும் மீட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் முன்னிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தோண்டப்பட்டிருந்தன. இதன்போது சுமார் 10 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Please write NEETHIPATHI or NEETHIVAN. What is neethavan ,,, that is colloquial language
of Srilankan tamils. Tamils lives in Tamilnad, Singapore, Malasia, they also read your news items.
Please use commonly understandable phrases.