Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனவர்களை இறந்துவிட்டவர்களாக கணக்கு காட்ட இலங்கை அரசு தொடர்ந்தும் முனைப்பு காட்டிவருகின்றது.இந்நிலையினில் அவர்களை இறந்தவர்களாகக்கருதிப் பதிவு செய்யும் சட்டத்தை மேலும் இரண்டு வருடங்களிற்கு அது நீடித்துமுள்ளது. குறித்த சட்டம் கொண்டு வரப்பட்டு இரு வருடங்கள் கடந்துள்ள போதும் 87 பேரே இதுவரை வடக்கில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் இந்தச் சட்டம் மூலமான பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.எனினும் அதனை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனவர்களை இறந்தவர்களாகக்கருதி பதிவு செய்யும் விசேட நடவடிக்கை  2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க சட்டத்தினூடாகக் கொண்டு வரப்பட்டது. இந்த விசேட சட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த  போதும், தற்போது அதனுடைய காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு  நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள்  நிறைவடைகின்ற நிலையில், வடக்கில் இதுவரை 87 பேரே காணாமற் போனோரை  இறந்தவர்களாகக் கருதி பதிவு செய்துள்ளனர்.   பெரும்பாலானவர்கள் தமது உறவுகள் திரும்பி வருவார்கள் என்று  நம்புவதால் மரணச்சான்றிதழை ஏற்க மறுத்து நிராகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to காணாமல் போனோருக்கு மரணச்சான்றிதழ்! அரசின் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com