Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் பட்டா அடங்கல் வாங்க காத்திருந்த பெண் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டதால் தற்போது விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்து வருகின்றர். டிச.31ம் தேதியுடன் இன்சூரன்ஸ் செய்வதற்கான தேதி முடிவடைகிறது. இதனால் தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் கூட்டம் அலைமோதுகிறது.

பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கு பட்டா அடங்கல் தாலுகா அலுவலகங்களில் வழங்கப்படும் இதை வங்கிகளில் கொடுத்தே இன்சூரன்சுக்கு பதிய முடியும். நேற்று முன்தினம் விடுமுறை என்பதாலும், பதிவு முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதாலும் காலை 6 மணிக்கெல்லாம் விவசாயிகள் க்யூவில் நிற்கத்தொடங்கினர். தாலுகா அலுவலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர்.

ஒரு கம்ப்யூட்டர் மட்டும் வைத்து பட்டா அடங்கல் வழங்கியதால் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் பகல் சுமார் 1 மணியளவில் கூட்ட நெரிசல் அதிகமானதையடுத்து வரிசையில் நின்றவர்கள் கலைந்தனர். அப்போது பெண் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காலை முதல் சாப்பிடாமல் வரிசையில் நிற்கிறோம். பகல் 11 மணியிலிருந்துதான் பட்டா அடங்கல் வழங்க தொடங்கினர். அதிகமான கூட்டமிருந்தும் கூடுதல் கம்ப்யூட்டர் வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டத்தை கட்டுப்படுத்த வாய்மொழியால் சத்தம் போட்டிருக்கலாம். ஆனால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மீது தடியடி நடத்தினர். இன்சூரன்ஸ் பதிவின் போது இப்பிரச்சனை ஏற்படாமல் தடுக்க பட்டா அடங்கல் ஆண்டுதோறும் பெறும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும். தாலுகா அலுவலகத்தில் கூடுதல் கம்ப்யூட்டர் வசதி செய்ய வேண்டும். விவசாயிகள் மீது தடியடி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

0 Responses to சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் பெண்கள், வயதானவர்கள் மீது போலீசார் தடியடி! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com