Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கைக்கு எதிராக தாம் முன்வைக்கவுள்ள பிரேரணையை தயாரிக்கும் பணிகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இலங்கையின் கள நிலவரங்களை ஆராய்வதற்காக, அமெரிக்காவின் உயர் பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்அடிப்படையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான துணை ராஜாங்க செயலாளர் டேசாய் பீஸ்வால், அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கையில் இலங்கையின் வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து, இலங்கையின் கள நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வதுடன், அரசாங்க மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதன்அடிப்படையில் அவர் தயாரிக்கும் அறிக்கையை மையப்படுத்தியே இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பித்தது அமெரிக்கா!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com