Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹெரோயின் கடத்தலுடன் சம்பந்தப்பட்டுள்ள பிரதமர் டி.எம்.ஜயரட்ண பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.

ஒருகொடவத்த சுங்கப்பிரிவில் அண்மையில் மீட்கப்பட்ட 2600 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய கொள்கலனை விடுவிக்குமாறு பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பிலான விடயம் அண்மையில் வெளியானது. அந்த கடிதத்தை எழுதியவர் யார் என்பதை பிரதமர் அறிவிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அவர் பதவி விலக வேண்டும் என்று அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பௌத்த நாட்டில் பௌத்த மதத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் பௌத்த சாசன அமைச்சே ஈடுபடுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயலின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பௌத்த சாசன அமைச்சராகவும் செயற்படும் பிரதமர் டி.எம்.ஜயரட்ண குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தாலோ அல்லது குற்றங்களை மறைக்க முயன்றாலோ அவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று ஓமல்பே சோபித தேரர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to பிரதமர் டி.எம்.ஜயரட்ண பதவி விலக வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com