Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அலரி மாளிகையில் இன்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் மேற்கொண்ட பின் இருவரும் சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஏற்கனவே வடக்கு மாகாண சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துப் பேசுவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அந்த பின்னணியிலேயே, வடக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள நிலையில் மாகாண சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பிலேயே இன்றைய சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதிக்கும், வடக்கு முதலமைச்சருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி லலித் வீரதுங்கவும் உடனிருந்தனர்.

0 Responses to மஹிந்தவுக்கும், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com