Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பர்மாவில் ராக்ஹின் மாநிலத்தில் ரோஹிங்யா இன முஸ்லீம்கள் பௌத்தர்களால் கொல்லப்பட்டதற்கு உடனடியாக விசாரணையை தொடக்குமாறு ஐ.நா அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்த ஜனவரி மாதம் தொடக்கம் முதல் குறித்த ராக்ஹின் மாநிலத்தில் இடம்பெற்ற கலவரங்களில் 48 ரோஹிங்யா இன முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2012 ஜூலை மாதம் தொடக்கம் இங்கு முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வந்துள்ளது.

அண்மையில் கொல்லப்பட்டவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்கியுள்ளனர்.  ரோஹிங்யாவில் வாழும் முஸ்லீம்கள் தமக்கென சொந்தமாக ஒரு மாநிலம் அற்றவர்களாக பர்மாவிலும், பங்களாதேஷினாலும் அங்கீகரிக்கப்படாதவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2012 இங்கு பௌத்தர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரங்களில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பர்மாவில் 48 முஸ்லீம்கள் படுகொலை : விசாரணையைக் கோரும் ஐ.நா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com