நடிகர் திலகம் சிவாஜி சிலை குறித்த மறு சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொள்ளவில்லை, எனினும் முறைப்படி மனுத் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்றும், இதனால் விபத்துக்கள் நேரிடுகிறது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கலாகி இருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை முடிவடைந்து, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் சிவாஜி சிலை குறித்து தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் எடுத்துக் கொள்ளலாம் என்று, முடிவை தமிழக அரசின் கையில் ஒப்படைத்தது.
இதை அடுத்து இன்று அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்பது உண்மையல்ல என்றும், அனைத்து துறையினரின் அனுமதி பெற்றே அந்த சிலை அமைக்கப் பட்டது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் சிவாஜி சிலையினால் விபத்து ஏற்பட்டது என்பதற்கு போக்குவரத்து காவல் துறையிடம் எந்த பதிவும் இல்லை என்றும், சிலையை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைத்தால் சிலை பெருமளவு சேதமடையும் வாய்ப்புக்கள் உள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், முறையான மறுசீராய்வு மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to சிவாஜி சிலை குறித்த மறு சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுப்பு!