Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் ஐந்தில் ஒரு பெண் பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்யப்படுவதாக அதிர்ச்சிப் புள்ளிவிபரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பாதிப்புக்கள் குறித்த பதிவுகளை அரசின் ஆய்வு அமைப்புக்கள் ஆராய்ந்து வந்தன. இந்நிலையில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கூட்டம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடேன் தலைமையில் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின் படி

அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் கற்பழிக்கப்படுகிறார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிபேர் கிட்டத்தட்ட 18 வயதிற்கு குறைவான இளம் பெண்களாகவே உள்ளனர். அனைத்து இனத்தை சேர்ந்த பெண்களும் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறபோது குறிப்பிட்ட சில பெண்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இதில் 33.5 சதவிகிதம்பேர் கலப்பு இனத்தை சேர்ந்த பெண்கள் ஆவர். 27 சதவிகித அமெரிக்க இந்திய பெண்களும், ஹிஸ்பேனிக் இன பெண்கள் 15 சதவிகிதம், கருப்பு இனத்தவர்கள் 22 சதவிகிதம், வெள்ளை இனப்பெண்கள் 19 சதவிகிதத்தினரும் கற்பழிக்கப்படுகின்றனர்.

இந்த கற்பழிப்புகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடக்கிறது. 98 சதவிகிதம் கற்பழிப்புகள் ஆண்களாலேயே நடக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஆண்களும், சிறுவர்களும் இந்தபாதிப்புக்கு ஆளாகின்றனர். இதில் 71 ஆண்களுக்கு ஒருவர் கற்பழிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அமெரிக்காவில் ஐந்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com