Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் திருக்கேதீச்சர மனித புதைகுழியில் மேலும் 5 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதியாளர் ஆனந்தி கனகரட்ணம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல் அகழும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதைகுழி 2 மீற்றர் வரை தோண்டப்பட்டுள்ளது. இதன்போதே இவ் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

16 தடவையாக தோண்டப்பட்ட இவ் எலும்புக்கூடுகளையும் சேர்ந்து மொத்தமாக மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் மன்னார் பொது மருத்துவமனையில் பாதுகாப்பான இடம் ஒன்றில் 16 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

0 Responses to மன்னார் புதைகுழி இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு! 53 ஆக அதிகரிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com