இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக் கூறும் தன்மையை வெளிப்படுத்தக் கூடிய நேர்மையை கொண்டிருக்கவில்லை என்று, வொசிங்டனில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய ஆலோசனை பணிப்பாளர் ஜோன் சிப்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் அவர் இதனைத்
தெரிவித்துள்ளார்.
நேர்மையான அரசாங்கம் ஒன்றாக இருந்திருந்தால், சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இதுவரையில் மனித உரிமைகள் உள்ளிட்ட தாங்கள் பொறுப்புக் கூற வேண்டிய விடயங்களில் பதில் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் இலங்கை அவ்வாறு எதனையும் செய்யவில்லை.
அரசாங்கம் ஒன்று உள்நாட்டு விவகாரங்களை தீர்த்துக் கொள்வதற்கு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாதிருந்தால், சர்வதேச நாடுகள் அதில் தலையிடுவதில் எந்த தவறும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to இலங்கை பொறுப்புக்கூறும் நேர்மையைக் கொண்டிருக்கவில்லை – ஜோன் சிப்டன்