மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சிப் பணிகளைக் கவனிக்க செல்வதால் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
பாஜக வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி, அங்கங்கு கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்தி வரும் வேளையில் காங்கிரஸ் சார்பாக இப்போதுதான் மத்திய அமைச்சர்கள் தங்களது பணிகளை ராஜினாமா செய்து விட்டு, கட்சிப் பணியைக் கவனிக்க சென்று வருகின்றனர்.
ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பு காண்பித்து வரும் ராகுல்காந்தி. மாநிலங்களில் கட்சிப் பணிகளைக் கவனிக்க மூத்த அமைச்சர்களை அனுப்பி வைத்து வருகிறார். அதன்படி ஏற்கனவே சுற்று சூழல் சுகாதார அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் போன்றவர்களை மக்களவைத் தேர்தலுக்குள் கட்சியைப் பலப்படுத்தவும், தேர்தல் பிரச்சார வேலைகளைக் கவனிக்கவும் அனுப்பி வைத்து வருகிறார்.
எனவே, தற்போது இவர்கள் வரிசையில் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜாவும், தனது அமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, கட்சிப் பணிகளை கவனிக்க செல்லவுள்ளார். ராகுல் காந்தியின் நற்பெயரை சம்பாதித்தவர்களில் செல்ஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா ராஜினாமா