டெல்லி காவல்துறை டெல்லி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, டெல்லியின் ராஜ்பாத்தில் ஆம் ஆத்மி கட்சி நடத்தி வரும் தர்ணா போராட்டம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இந்தியக் குடியரசுத் தினம் டெல்லியில் இராணுவ அணிவகுப்புடன் கொண்டாடப்படவுள்ளதால் அதற்குரிய ஆயத்த வேலைகள் செய்வதற்கு, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்தி வரும் இடம் தேவை என்பதால், தர்ணாவை ஜந்தர் மந்தர் பகுதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளார் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே.
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேஜ்ரிவால், 'ஆர்ப்பாட்ட இடத்தை மாற்றிக் கொள்ளுமாறு சொல்வதற்கு சுஷில்குமார் ஷிண்டேவுக்கு உரிமை இல்லை. டெல்லி முதல்வர் நான் தான். ஆர்ப்பாட்ட்ம எங்கு நடைபெறவேண்டுமென முடிவெடுப்பது டெல்லி முதலமைச்சரின் உரிமை.
ஷிண்டேயின் வீட்டுக் கண்ணாடியை உடைத்ததற்காக அவர் உடனடியாக 12 காவல்துறை அதிகாரிகளை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பணிநீக்கம் செய்கிறார். ஆனால் பாலியல் பலாத்காரப் படுத்தப்பட்ட பெண்ணுக்காக குரல் கொடுக்க முனைந்தால், அதற்கு முதலில் விசாரணை தேவை என்கிறார்' என அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி காவல்துறை டெல்லி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவேண்டும். டெல்லி சட்டத்துறை அமைச்சர் சோம்னாத் பார்தியை எதிர்த்த காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்யவேண்டும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட மற்றும் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் உகண்டா நாட்டுப் பெண்ணை கைது செய்யவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை குடியரசுத் தினத்திற்கான அணிவகுப்பு பயிற்சிகளை மேற்கொள்ள முனையும் இந்திய இராணுவத்தினரை ஆம் ஆத்மி கட்சியினர் தடுத்து நிறுத்துவதாகவும் இது தேசிய அச்சுறுத்தலுக்கு உட்பட்டது எனவும் பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை ஆம் ஆத்மி கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக அதே இடத்தில் தற்போது பாஜகவும் விஜய் கோல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் டெல்லியில் ரைசினா வீதி மற்றும் அண்மித்த சில பிரதான வீதிகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. மெட்ரோ நிலையங்களும் மூடபட்டுள்ளன.

0 Responses to டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தர்ணா போராட்டம் ஏற்படுத்தும் புதிய சர்ச்சைகள்!