Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் உணர்ச்சிகளுக்குள் சிக்கி தமது சிந்தனையைத் தவறவிடாது,

யதார்த்த நிலைமையைப் புரிந்து கொண்டு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

கிழக்கிலுள்ள தமிழ் மக்களை காலம் காலமாக தமிழ் அரசியல் தலைமைகள் ஏமாற்றி வந்துள்ளன. எனவே, எதிர்காலத்தில் யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை பாடசாலைக் கட்டடத்தொகுதியொன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இன்றைய நிலையில் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு உண்மையான காரணம் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள்தான் என்பதனையும் அவர்கள் உணர்ந்துள்ளார்கள். உண்மையில் கூறப்போனால் தேசியம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள்தான் அதிகம் தமிழ்த் தேசியம் பற்றி பேசுகின்றார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்காலத்தில் யாரிடமும் ஏமாறக்கூடாது: சிவநேசத்துரை சந்திரகாந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com