Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

'திமுகவுக்கு போட்டியாக நான் யாரையும் நிறுத்த தேவையில்லை, திமுக தானாக தோற்கும்' என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை  நீலாங்கரையில் உள்ள  தமது மகள் கயல்விழி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் மு.க.அழகிரி. அப்போது, 'நான் ஹாங்காங் சென்று விட்டு திரும்பி வந்தபோது 5 பேர்களின் கட்சி நீக்கம் குறித்து கேள்வி பட்டு நியாயம் கேட்க சென்றேன். நியாயம் கேட்க  சென்ற எனக்கு நீக்கம் என்பதுதான் பரிசாக கிடைத்தது. முன்பு தலைவரை சந்திக்க சென்ற போதும், 5 பேரின் பதவி நீக்கம் குறித்து நியாயம் கேட்கத்தான் சென்றேன். நீதி கிடைக்கும் என்று கூறினார்கள் ஆனால், திமுகவில் ஜனநாயகம் செத்து விட்டது. கட்சியில் குழப்பம் விளைவித்தேன் என்கிறார்களே, என்ன குழப்பம் என்று கூறட்டும், தலைவர் இருக்கும் போது வரும் கால முதல்வரே என்று போஸ்டர் அடிக்கிறார்கள் அது தவறில்லையா, ஒரு ஆதரவாளர் போஸ்டர் அடிப்பது குற்றமா' என தெரிவித்தார்.

மேலும் தமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கவும், திமுகவில் நடக்கும் குளறுபடிகளை ஆதாரத்தோடு தெரிவிக்கவும், வருகிற 31ம் திகதி மதுரையில் பிரெஸ் மீட் வைத்து அறிவிப்பதாக கூறியுள்ளார். திமுகவுக்கு போட்டியாக வேட்பாளர்களை நிறுத்துவீர்களா என்கிற  கேள்விக்கு தாம் போட்டியிடப் போவதில்லை என்றும், திமுகவிற்குப் போட்டியாக நான் யாரையும் நிறுத்த வேண்டியதில்லை, திமுக தானாக தோற்றுப் போகும் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to திமுகவுக்குப் போட்டியாக நான் நிறுத்த தேவையில்லை, திமுக தானாக தோற்கும்!:மு.க.அழகிரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com