Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், மூளைச்சாவடைந்த பெண் ஒருவரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உயிர் பாதுகாப்பு கவசங்களை நீக்கிவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்லிஸ் முனோஸ் எனும் குறித்த பெண்மணி 14 வார கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மூளைச்சாவு அடைந்துள்ள நிலையிலும் அவரது உயிர் பாதுகாப்பு கவசங்களை (Life Support) மருத்துவ உபகரணங்களை நீக்கிவிட முடியாது என மருத்துவமனை விவாதித்து வருகிறது. ஆனால் குறித்த பெண்ணின் கணவரோ,  தனது மனைவியின் விருப்பத்திற்கு மாறாக அவரை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க முடியாது. அவரை உடனடியாக இயற்கை எய்திட வழிவகை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 பிறக்கப் போகும் குழந்தையை கருக்கலைப்பு செய்வது எளிதில் நடைபெற முடியாத சட்டவிரோதச் செயலாக டெக்ஸாஸ் மாநிலத்தில் பார்க்கப்படுவதால் தான் இவ்வளவு பிரச்சினையும் எழுந்தது.

நீதிமன்றம் வரை இவ்விவகாரம் சென்ற நிலையில், தற்போது மார்லிஸ் முனோஸின் கணவரின் நியாயமான கோரிக்கைக்கு நீதிமன்றம் செவி சாய்த்துள்ளது. இரத்தக் கட்டியால் ஏற்கனவே மூளைச்சாவடைந்த மார்லிஸ் முனோஸ் சட்டப்படி பார்த்தால் உயிரிழந்து விட்ட பெண்ணாகவே பார்க்கப்பட வேண்டும். இதற்கு மேலும் அவரை உயிருடன் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது. அதோடு தொழில்நுட்ப ரீதியில் உயிரிழந்த ஒருவராக கருதப்படும் ஒருவர் கர்ப்பிணியாக இருப்பதற்கு சாத்தியமில்லை.
எனவே அவரது உயிர் பாதுகாப்பு காவசங்களை உடனடியாக நீக்கிவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இந்த உத்தரவு அமல்படுத்தப்படவிருக்கிறது.

ஆனால் ஒரு குடும்பத்தின் தன்னிச்சையான விருப்பத்திற்கு எதிராக சட்டம், விதிமுறை என சொல்லிக் கொண்டு ஒரு மாநில அரசும், மருத்துவமனை நிர்வாகமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் என டெக்ஸாஸ் மக்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

0 Responses to மூளைச்சாவடைந்த கர்ப்பிணிப் பெண்ணை உயிர்ப்புடன் வைத்திருப்பது நியாயமானதா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com