Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேற்கு வங்கத்தில் மலை சாதிப் பெண் ஒருவர் வேறு சாதி பையனை காதலித்ததால் அந்த பெண்ணுக்கு பஞ்சாயத்து தலைவர் 12 பேரை விட்டு பாலியல் வன்கொடுமை செய்ய தீர்ப்பு வழங்கி நடைமுறைப் படுத்தியது, மேற்கு வங்கத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் ஒரு மலை சாதி பெண், வேறு பிரிவை சேர்ந்த ஆண் மகனை காதலித்து உள்ளார். இது பஞ்சாயத்து தலைவர் விசாரணைக்கு வந்த நிலையில், பஞ்சாயத்துத் தலைவர் மலை சாதி  பெண் வேறு ஆணை காதலித்ததற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

அபராதத் தொகையை செலுத்தும் வரை பெண்ணை  மரத்தில் கட்டி வைத்து இருந்த பஞ்சாயத்து தலைவர் பெற்றோரால் பணத்தை செலுத்த முடியாது என்று தெரிந்த பட்சத்தில், அந்த இளம்பெண்ணை தம்முடன் சேர்த்து 12 பேர் கொண்ட கும்பலை பாலியல் பலாத்காரம் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

12 பேரின் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான அப்பெண், மயங்கிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். குற்றவாளிகளில் 11 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய ஒருவரை வலைவீசித் தேடி வருகின்றனர். இதனால் மேற்கு வங்கத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

0 Responses to மேற்கு வங்க மாநிலத்தில் உயர் சாதிப் பையனை காதலித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை தீர்ப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com