Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி துணை நிலை ஆளுனரை இன்று பிற்பகல் 2 மணிக்கு சந்தித்து பேசியுள்ளார் அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி அமைச்சர் சோம்நாத் பார்த்தி மீது தெற்கு டெல்லியில் வசிக்கும் நைஜீரியா மற்றும் உகாண்டா பெண்கள் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர். அத்துமீறி தங்களது வீடுகளுக்குள் நுழைந்து, பாலியல் ரீதியாகவும், நிற ரீதியாகவும் வன்முறையுடன் செயல் பட்டதாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

அமைச்சர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் அந்த பெண்கள் வலியுறுத்திய நிலையில் இன்று மாலை 4 மணிக்குள் தேசிய மகளிர் ஆணையத்தில் சோம்நாத் பார்த்தி ஆஜராக வேண்டும் என்றும், அப்படி ஆஜராகாத பட்சத்தில் சோம்நாத் பார்த்தி மீது வழக்கு பதியப் படும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து  இருக்கிறது.

இந்நிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி துணை நிலை ஆளுனரை சந்தித்தது  மிக முக்கியத்துவம்  பெற்றுள்ளது. சந்திப்பில் என்ன  தகவல் ஆலோசிக்கப் பட்டது என்பது இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  டெல்லியில் நைஜீரிய, உகண்டா பெண்கள் பாலியல் விபச்சாரம், போதைவஸ்து விற்பனை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் எனினும் அவர்களை காவல்துறையினர் கைது செய்ய மறுப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to டெல்லி துணை நிலை ஆளுனரை சந்தித்தார் மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com