Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் பிரபல கடற்றொழில் துறைசார் ஆலோசகர் மொகமட் காசிம் இன்று கிளிநொச்சி பூநகரியினில் வைத்து கைதாகியுள்ளதாக முதற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா அல்லது நாடு கடத்த ஏதுவாக வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்டாரா என்பது பற்றி இன்றிரவு வரை உறுதிப்படுத்த முடியவில்லை.

தெற்கினை சேர்ந்த முன்னணி ஏற்றுமதி இறக்குமதி நிறுவனமொன்று வன்னியினில் கடற்பாசி தொழிலை ஊக்குவிப்பதிலும் அவற்றை உள்ளுர் மீனவர்களிடமிருந்து கொள்வனவு செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றது.அவ்வகையினில் வலைப்பாடு மற்றும் நாச்சிக்குடா பகுதிகளினில் பாசி வளர்ப்பினை மேம்படுத்த திட்டங்கள் குறித்த அமைப்பினால் தீட்டப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதிகளினில் கடற்பாசி வளர்ப்பு தொடர்பாக ஆராய்வதற்கும் ஆலோசனைகளை வழங்கவுமெனவுமே இந்தியாவின் பிரபல கடற்றொழில் துறைசார் ஆலோசகர் மொகமட் காசிம் இன்று கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

அவ்வகையினில் இன்று தொடர்புடைய தரப்புக்களை சந்தித்த பின்னர் வலைப்பாடு பகுதிக்கு புறப்பட்டு சென்றிருந்த வேளையினில் அவரை பின் தொடர்ந்து சென்ற இலங்கை படைப்புலனாய்வுப்பிரிவினரே அவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே தமிழக பத்திரிகையாளர் தமிழ் மகாபிரபாகரன் மற்றும் கவிஞர் ஜெயபாலன் ஆகிய இருவரும் இதே போன்றே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதால் ஆலோசகர் மொகமட் காசிமும் நாடுகடத்தப்படலாமென நம்பப்படுகின்றது.

0 Responses to இந்திய நிபுணர் கிளிநொச்சியினில் கைது! நாடு கடத்தப்படலாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com