Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தினில் படைத்தரப்பினால் நடத்தப்பட்டு வந்ம 30 இற்கும் மேற்பட்ட இராணுவ விற்பனை நிலையங்களை இழுத்து மூடியிருப்பதாக யாழ் மாவட்ட இராணுவத்தளபதி உதயபெரேரா தெரிவித்தார்.

இன்று அவரை சந்தித்த அரச ஆதரவு ஆயுதக்குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு பலாலி கூட்டுப்படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்துள்ளது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள யாழ்.கட்டளைத்தளபதியுடனான சந்திப்பில் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டதாக துணை ஆயுதக்குழுவான ஈபிடிபி அறிவித்துள்ளது. அதில் வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் வளலாய் கிராம சேவர் பிரிவினை முழுமையாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஆமிக்கடைகள் மூடப்படுகின்றனவாம்! இராணுவத்தளபதி சொல்கின்றார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com